Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

திருமயம் அருகே ராங்கியத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை

திருமயம் அருகே ராங்கியத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்தை இயக்கி வைத்த அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியத்தில் புதிய வழித்தட பேருந்து சேவையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், ராங்கியத்தில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர்  கூறியதாவது:

கிராமப் புறங்களிலும் தமிழக அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் கள். அதன்படி ராங்கியம் பகுதியில் உள்ள மாணவ, மாணவி கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வழித்தட பேருந்து சேவையானது, காலை 07.55 மணியளவில் புதுக்கோட்டையிலிருந்து நச்சாந்துப்பட்டி, குழிபிறை, ராங்கியம் மெட்டு வழியாக ராங்கியம் அரசமரம் வரையிலும் மற்றும் காலை 9.10 மணியளவில் ராங்கியம் அரசமரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து ராங்கியம் மெட்டு, குழிபிறை, நச்சாந்துப்பட்டி வழியாக புதுக்கோட்டை வரையிலும் சென்று வரும். இதன்மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் உரிய நேரத்திற்கு சென்றுவர முடியும்.

எனவே  தமிழ்நாடு முதலமைச்சர்  இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

இந்நிகழ்ச்சியில், துணை மேலாளர் (வணிகம்)  சுப்பு, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி பொன்னையா, வட்டாட்சியர்  புவியரசன், கிளை மேலாளர் (நகர்) பழனிவேல், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கிளை செயலாளர் அசோகன், தொழிலா ளர் முன்னேற்ற சங்கத் தலைவர் சேகர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top