Close
நவம்பர் 25, 2024 5:03 காலை

மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டம்: அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை

மிஷன் இந்திர தனுஷ் 5.0 ஆட்சியர் தகவல்

இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் வழங்கப்படும் தடுப்பூசி சேவைகளை மேம்படுத்தவும், கோவிட் தொற்று காலத்தில் தடுப்பூசி விடுப்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி சேவைகளை கண்டறிந்து விடுதலின்றி தடுப்பூசி சேவையினை வழங்கிடவும்,

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 0 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப் பட்டுள்ள தடுப்பூசிகள் முழுமையாக இலக்கீட்டினை அடையப்பெற்றுள்ளதை கணக்கெடுப்பு செய்தும், கர்ப்பிணிகளுக்கும், 0 முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி சேவைகள் ஏதும் விடுபட்டுள்ளனவா எனவும் கணக்கெடுப்பு செய்தும்.

அதனை தொடர்ந்து மிஷன் இந்திர தனுஷ் 5.0 என்ற சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும், சிறப்பு கவனம் தேவைப்படும் இடங்களை கண்டறிந்தும்

முதல் சுற்று ஆகஸ்டு மாதம் 7 முதல் 12 வரையிலும், இரண்டாவது சுற்று செப்டம்பர் 11 முதல் 16 வரையிலும் மற்றும் மூன்றாம் சுற்று அக்டோபர் 9 முதல் 14 வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட தடுப்பூசி பணிகள் தொடர்பான கண்காணிப்பு, ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் (District Task Force on Immunization Committee Meeting) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.07.2023 அன்று காலை நடைப்பெற்றது.

இதில் சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம், புதுக்கோட்டை ஆகியோருக்கு மேற்கொள்ள வேண்டிய உரிய பணிகளை ஒருங்கிணைப்பு செய்து தடுப்பூசி விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை கணக்கெடுப்பு செய்து கண்டறிந்து தடுப்பூசிகள் வழங்கும் முகாமினை சிறப்பாக செயல்படுத்திட மாவட்ட ஆட்சியரால்  அறிவுரை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்டு 7 முதல் 12ம் தேதி வரை மாவட்டத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் மிஷன் இந்திர தனுஷ் 5.0 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் 0 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் முகாம்கள் மூலம் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே உள்ள துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் கிராம சுகாதார செவிலியர் மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாம்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு முழுமையான தடுப்பூசி சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்  என  ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top