Close
நவம்பர் 22, 2024 5:28 காலை

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பல்வேறு நூல்கள் வெளியீடு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் நூலை வெளியிட்ட கவிஞர் முருகேஷ்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் தினம் தோறும்  பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்களின் நூல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9-ஆவது நாளான சனிக்கிழமை காலை அமர்வில்  எழுத்தாளர் விழியனின் ‘மலைப்பூ’ என்ற நூல் வெளியிடப்பட்டது. விழாவிற்கு கவிஞர் மு.முருகேஷ் தலைமை வகித்து புத்தகத்தை வெளியிட்டார்.

முதல் பிரதிகளை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் உ.தய ரிஸ்னியா, வி.எஸ்.கவிசாகர்,  அ.அட்சயா, புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பா.உ.தியானோ ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர்  நூல் குறித்து நூல் ஆசிரியருடனான கலந்துரையாடல் நிகழ்விலும் பங்கேற்றனர்.

நூலை அறிமுகம் செய்து கவிஞர் தங்கம்மூர்த்தி பேசினார். புதிப்பாளர் நாகராஜன், மொழி பெயர்ப்பாளர் ராமேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்றார். நூலாசிரியர் விழியன் ஏற்புரை வழங்கினார்.

நூலை அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். புத்தகத் திருவிழாக்குழு தலைவர்- மாவட்ட ஆட்சியர் ஐ.சி. மெர்சி ரம்யா, ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.மணவாளன், கவிஞர் ஜீவி, கவிஞர் ராசி.பன்னீர்செல்வன், எம்.வீரமுத்து, க.சதாசிவம்,  கீதா, விமலா, பவுனம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை நிகழ்வில் தன்னார்வ பயிலும் வட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் எழுதிய ‘ஒரு ஆணின் பிரசவம்’ என்ற நூலை கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் வெளியிட்ட, கவிஞர்கள் நா.முத்துநிலவன், ஜீவி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top