புதுக்கோட்டை மாவட்ட 6 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் விழா பேருரையாற்றி, புத்தகங்களை பார்வையிட்டார்கள்.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6- ஆவது புத்தகத் திருவிழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் (05.08.2023) பங்கேற்று விழா பேருரையாற்றி, புத்தகங்களை பார்வையிட்டனர்.
புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி,.செம்பை மனவாளன், முனைவர் கே.ராஜாமுகமது,துரை மதிவாணன், .கரு.ராஜேந்திரன், ப.உமாபதி ஆகிய 6 நபர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் களுக்கான விருதுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கி விழாப்பேருரையில் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் நலனிற்காக எண்ணற்ற கல்வித் திட்ட9.களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விழா நிகழ்ச்சிகளில் பரிசாக புத்தகங்களை வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பரிசாக பெறப்பட்ட புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கி உள்ளார்கள்.
இந்த புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் கலந்துகொள்வதன் மூலம் புத்தகங்கள் படிப்பதற்கு ஊக்கமளிக்கும். அதன்படி இன்றையதினம் நடைபெறுகிற இந்த 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா சிறப்பாக அமையப்பெற்றுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவினை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவல.வீ மெய்யநாதன் பேசியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கரைகொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் அரங்குகள் அமைக்கப்பட்டு புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 28.07.2023 முதல் 06.08.2023 வரை 10 நாட்கள் நடைபெற்று வருகிறது.
எனவே இப்புத்தக திருவிழாவினை அனைத்துத்தரப்பு மக்களும் பயன்படுத்திக்கொண்டு, புத்தகங்கள் வாங்கி பயன்பெறலாம் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;.