Close
நவம்பர் 22, 2024 3:01 காலை

அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வு ஆக 17 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்

அக்னிபாத் திட்டத்தில் அக்னி வீர் வாயு வீரர்கள் சேர்ப்பு

அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற் காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப் பதாரர்களிடமிருந்து 27.07.2023 முதல் 17.08.2023 வரை இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பின்வரும்  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணையவழித் தேர்வு 13.10.2023 அன்று முதல் நடைபெறவுள்ளது. 27.06.2003 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் 27.12.2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வித் தகுதி 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் / ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக், எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக், ஆட்டோ மோட்டிவ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென் டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர் மேஷசன் டெக்னாலஜி) மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும்.பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது மூன்று முறைகளை கொண்டது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.

அக்னிவீர திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50.000 முதல் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணிமுடிந்தபிறகு 15 ஆண்டுகாலத்திற்கு தொடர்ந்து பணி புரிய அனுமதிக்கப்படுவார்கள்.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்திய விமானப்படை அக்னிபாத்தின் இணையதளத்தில் https://agnipathvayu.cdac.in ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக் கலாம் அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் தங்களது முழு விவரத்தினைhttps://forms.ple/K9vnQSJ9NRJoWkoC7 லிங்கில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தொடர்புக்கு 04362-237037, 9499055905 மற்றும் 8110919990 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித் துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top