புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சார்ந்த திருக்கோகர் ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் திருக்கோயில் சமஸ்தான மன்னரின் குலதெய்வமாக விளங்குகிறது.
புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த அருள்மிகு பிரஹதாம்பாள் உடனுறை அருள்மிகு கோகர்ணேஸ்வரர் ஆலயம் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு(கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள்.
இது குடவரைக் கோயில் ஆகும். குடவரைக் கோயில்கள் என்பவை, செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை அப்படியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக் கப்பட்டவை.
திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னால் உள்ள மண்டபப் பகுதியில் இடப்புறச் சுவரில் விநாயகரும், வடப்புறச் சுவர்ப் பகுதியில் கங்காதரமூர்த்தியும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இக்கோயில் கும்பாபிஷேகமானது கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் நடைபெறது. இதைத் தொடந்து வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளதையோட்டி அதற்கான கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகம் 6 கோடி மதிப்பில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடத்த குடமுழுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டது இதையெட்டிதற்போது . கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பலாலயம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கடந்த 3.7.2023 ஆம் தேதி குடமுழுக்கு விழாவுக்கான திருப்பணிகள் தொடங்கியது. கோயில் கோபுரங்கள் பராமரிப்பு பணி சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. சிறப்பு பூஜையில் மன்னர் குடும்பத்தைச் சார்ந்த ராணி சாருபாலா தொண்டைமான், கம்பன் கழகச்செயலர் ரா. சம்பத்குமார், டாக்டர் ராமதாஸ்.
சத்தியராம் ராமுக்கண்ணு, அருட்பணி மருத்துவர் டி.எஸ். ராமமூர்த்தி, அரைக்காசு அம்மன் ஊஞ்சல் சேவை அறநிலையத்தலைவர் சத்தியபாமா ராமுக்கண்ணு, செயலர் எஸ். ரவிஅய்யர், பொருளாளர் ராஜேந்திரன், ஆடிட்டர் விஜயராகவன்,
திருக்கோகர்கணம் முரளி, ந. புண்ணியமூர்த்தி, விநாயகா குமார், கவிஞர் ச. பாரதி, சிவாச்சாரியார்கள் கணபதி குருக்கள், ரவி குருக்கள், கார்த்திக்குருக்கள் மற்றும் விழாக் குழுவினர் பொதுமக்கள் உபயதாரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.