Close
நவம்பர் 21, 2024 11:51 மணி

எய்டு இந்தியா சார்பில் 10 குடும்பங்களுக்கு இலவச வீடுகள்: எம்எல்ஏ சின்னத்துரை அடிக்கல்

புதுக்கோட்டை

எய்டு இந்தியா சார்பில் 10 குடும்பங்களுக்கு இலவச வீடுகள் எம்.சின்னதுரை எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை அருகே பழங்குடியின மக்களுக்கு எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் 10 வீடுககள் கட்டிக்கொடுக் கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் எம்.சின்னதுரை எம்எல்ஏ நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் சிப்காட் காமராஜர் நகரில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் 10 பழங்குடியின குடும்பங் களுக்கு தலா ரூ.2.5 லட்சம் மதிப்பில் ரூ.25 லட்சத்தில் எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அடிக்கல்நாட்டி பணிகளைத் தொடக்கி வைத்தார்.

நிகழ்வில் மேனாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, சமூக ஆர்வலர்கள் கே.சண்முகம், டி.சலோமி, எம்.ஜோஷி, தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top