Close
செப்டம்பர் 19, 2024 11:04 மணி

ஆகஸ்ட் 9 ல்சென்னையில் நடைபெறும் பெருந்திரள் அமர்வு போராட்டத்தை விளக்கி தஞ்சையில் பிரசார இயக்கம்

தஞ்சாவூர்

ஆகஸ்ட் 9 சென்னையில் நடைபெறும் பெருந்திரள் அமர்வு போராட்டத்தை பொதுமக்களிடம் விளக்கி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது

ஆகஸ்ட் 9 சென்னையில் நடைபெறும் பெருந்திரள் அமர்வு போராட்டத்தை பொதுமக்களிடம் விளக்கி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சையில் இன்று பிரசார இயக்கம் நடைபெற்றது.

ஒன்றிய மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும்,ஒன்றிய மோடி அரசாங்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரிகளை நீக்க வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் 26 ஆயிரம் வழங்கிட வேண்டும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட விரோத தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும்,விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

அனைத்து பொது துறைகளிலும் நிரந்தர பணிகளில் ஒப்பந்த அவுட்சோர்சிங், தினக்கூலி முறைகளை கைவிட வேண்டும், நேரடி நியமனம் செய்திட வேண்டும், மக்களுக்கு சேவை செய்யும் பொதுத் துறைகளை தனியாருக்கு விற்கக் கூடாது.

நலவாரியங்களை சீர்குலைக்க கூடாது, புதிய மோட்டார் வாகனம் மற்றும் மின்சார சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும், குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூபாய் 3000ம் வழங்கிட வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை நகராட்சி ,பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவு படுத்த வேண்டும், நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்த வேண்டும் ,புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசை வலியுறுத்தி,

தொமுச,ஏ ஐ டி யு சி, சி ஐ டி யு, ஐ என் டி யு சி, ஏ ஐ சி சி டி யு , எச் எம் எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு கிளர்ச்சி நாளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்னையில் பங்கேற்கும் பெருந்திரள் அமர்வு போராட்டத்தை பொதுமக்களிடம் விளக்கி துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், ரயிலடி ,கீழவாசல், தெற்கு வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பிரசார நிகழ்வில் அனைத்து சங்க மாவட்ட செயலாளர்கள் தொமுச டி. ராஜேந்திரன், ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர் .தில்லைவனம், சிஐடியூ மாநில செயலாளர் சி.ஜெயபால், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஏ ஐ சி சி டி யு சி மாவட்ட செயலாளர் கே.ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தொமுச நிர்வாகிகள் எம். கிருஷ்ணமூர்த்தி, எம்.சிவானந்தன், பி.ஆர். சுகுமாரன், பி.செந்தில் குமார், ஜெ .ஜெயச்சந்திரன், ஏ ஐ டி யூ சி நிர்வாகிகள் தி.கோவிந்தராஜன், துரை.மதிவாணன், வெ.சேவையா, ஆர் .பி.முத்துக்குமரன்,

பொன் . தங்கவேல் , சி ஐ டி யூ நிர்வாகிகள் கே.அன்பு, பி.என்.பேர்நீதிஆழ்வார், இ.டி.எஸ்.மூர்த்தி, ஏ.ராஜா, பி.காணிக்கைராஜ், ஐஎன்டியூசி நிர்வாகிகள் ஏ.ரவிச்சந்திரன், ஏ.கணேசன், பழனிவேல், பாரதிதாசன், ஏ ஐ சி சி டியூ நிர்வாகிகள் ரகுநாதன், தன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top