Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் 412 மனுக்கள் அளிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி அளித்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர்.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளு மாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், பார்வைத்திறன் குறைபாடுடைய கல்வி பயிலும் 5 நபர்க ளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.50,000 மதிப்புடைய மேக்னிபயர் கருவியும் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ.13,500 மதிப்புடைய தக்க செயலி யுடன் கூடிய திறன் பேசியும் (Smart Phone) என 6 பயனாளிக்கு மொத்தம் ரூ.63,500 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)மு.செய்யது முகம்மது, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top