Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

நரிக்குறவர் காலனிவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை

நரிக்குறவர் காலனி வாசிகளுக்கு பழங்குடியினரின சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள்சத்திரம் நரிக்குறவர் காலனியில்ரூ.9.30 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ரெங்கம்மாள் சத்திரம் நரிக்குறவர் காலனியில், மாவட்ட ஆட்சியரின்  சுய விருப்ப நிதியிலிருந்து ரூ.9.30 லட்சம் மதிப்பில் ஊசி, பாசி செய்வதற்கான உபகரணங்களையும், 250 நபர்களுக்கு பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ்களையும் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா (07.08.2023) வழங்கினார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்  மிகவும் பின்தங்கிய பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில் வெள்ளனூர் ஊராட்சிக்குட்பட்ட ரெங்கம்மாள்சத்திரம் நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, அவர்களை முன்னேற்றும் விதமாக மாவட்ட ஆட்சியரின் சுய விருப்ப நிதியிலிருந்து ரூ.9.30 லட்சம் மதிப்பில் ஊசி, பாசி செய்வதற்கான உபகரணங்களையும், 250 நபர்களுக்கு பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ்களும்  வழங்கப்பட்டது.

இதன்மூலமாக பழங்குடியினருக்கு அரசின் மூலமாக வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளின் வாயிலாக பயன்பெறுவதற்கும், உங்களின் குழந்தைகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். மேலும் உங்களின் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்திக்கொள்ள அரசின் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் அரசால் வழங்கப்பட்டுள்ள இந்த ஜாதி சான்றிதழ்களை பயன்படுத்தி, தங்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி அளிக்கவும், கடனுதவிகளை பெற்று தொழில்களை மேம்படுத்திடவும் முன்வர வேண்டும். மேலும் தங்களது பகுதிகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என ஆட்சியர் மெர்சி ரம்யா  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா, வட்டாட்சியர் சக்திவேல், ஊராட்சிமன்றத் தலைவர் பார்வதி வேலுச்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top