Close
நவம்பர் 25, 2024 2:34 காலை

தாட்கோ மூலம் அனிமேஷன் பயிற்சி பெற எஸ்சி/எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

தாட்கோ மூலம் மாணவர்களுக்கு அனிமேஷன் பயிற்சி

தாட்கோ மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்தAnimation மற்றும் Tally போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியான SAP, Data Analytics, Artificial Intelligence, Cloud Computing. Digital Marketing மேலும் Animation சம்பந்தப்பட்ட பயிற்சியான Multimedia & Animation, 2D, 3D மற்றும் Advanced Level Tally ERP 9 போன்ற பயிற்சிகளை முன்னனி பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்று தர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை பெறலாம்.

பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top