Close
நவம்பர் 22, 2024 9:28 காலை

புதுக்கோட்டை அருகே வெடிவிபத்தில் உயிரிழந்த காயமடைந்த குடும்பத்தி னருக்கு அமைச்சர் ரகுபதி ஆறுதல்

புதுக்கோட்டை

வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெடிமருந்து தொழிற்சாலை யில் ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் களின் வாரிசுதாரர்களையும் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களையும்  சட்டத்துறை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் வட்டம், பூங்குடி கிராமத்தில் இயங்கி வந்த வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வைரமணி மற்றும் குமார் ஆகியோரை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரிடம் ஆறுதல் கூறிய அமைச்சர் ரகுபதி

அதனைத்தொடர்ந்து, வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோவில்பட்டியைச் சேர்ந்த  வீரமுத்து,  திருமலை ஆகியோர் களின் வாரிசுதாரர்களை  அமைச்சர் எஸ்.ரகுபதி  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு உயர்தரத்திலான சிகிச்சையினை மேற்கொள்ளவும் மருத்துவர்களுக்கு அமைச்சர் ரகுபதி அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில்,  நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அரசு மருத்தவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.ராஜ்மோகன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உண்மைக்கு மாறான  தகவல்களைச் சொல்லி வருகிறார்.

பட்டாசு ஆலை விபத்தைப் பொருத்தவரை முதன்முதலில் அந்த இடத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர், திமுக மாவட்டச் செயலர் ஆகியோர் உரிய விவரங்களை அரசுக்குத் தெரிவித்து நிவாரணம் கொடுப்பது, சிகிச்சை கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளனர். எதிர்க்கட்சி என்றால் எதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை திருமயத்தில் நடைபயணம் மேற்கொண்டு பேசும்போது, என்னை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார். அவரது பேச்சு தவறானது. என்னால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அதை நான் விரும்பவில்லை. அவரோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை.

எந்த வழக்கிலும் நான் தண்டிக்கப்படவில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாகத் தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்களில் நான் விடுவிக்கப்பட்டிருக்கிறேன். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசியல் காரணங்களுக்காக அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது என்றார் ரகுபதி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top