வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகை மற்றும் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு அறிவித்த கிராமப்புற ஏழை, எளிய மக்களை மேம்படுத்துவதற்காக வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களைப் பட்டியல் தயாரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் பகுதியில் இப்பட்டியல் தயாரிப்பதில் பல்வேறு குளறுபடிகளும், மோசடிகளும் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யவும், தகுதியான நபர்களை பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்தி குன்றாண்டார்கோவில் வட்டார் வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.பழனிச்சாமி, கே.பழனிவேல், எஸ்.சாந்தா, பி.பெருமாள், எம்.சின்னத்துரை, எஸ்.செல்வராஜ், எம்.மகாலெட்சுமி, ஏ.ஆறுமுகம், எஸ்.சிவபெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்திற்குப் பிறகு குன்றாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பேபி ராணியிடம் பொதுமக்கள் கொண்டுவந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன.