Close
நவம்பர் 22, 2024 1:59 காலை

புதுக்கோட்டையில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதி ஏற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதி ஏற்றுக்கொண்ட ஊழியர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு  எதிரான உறுதிமொழியை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதி மொழியினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் (11.08.2023) அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு  எதிரான உறுதிமொழி யான, ‘போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்” என்ற உறுதிமொழியினை, ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வாசிக்க, அதனைத் தொடர்ந்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாசித்து உறுதி ஏற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் .மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திமு.செய்யது முகம்மது.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.க.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் (நீதியியல்) செந்தில்நாயகி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) அ.பாரதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top