புதுக்கோட்டை அருள்மிகு பிரஹதாம்பாள் உடனுறை அருள்மிகு கோகர்ணேசுவரர் ஆலயத்தில் அரைக்காசு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை மற்றும் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த அருள்மிகு பிரஹதாம்பாள் உடனுறை அருள்மிகு கோகர்ணேஸ்வரர் ஆலயம் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு(கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள்.
புதுக்கோட்டை திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை கோகர்னேஸ்வரர் ஆலயத்தில் அரைக்காசு அம்மன் ஊஞ்சல் சேவை மன்றத்தினால் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அரைக்காசு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை விழாவை விமரிசையாக அறநிலையத்தின் நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை நாளில் உலக நன்மைக்காகவும் மழை பெய்ய வேண்டியும் 108 சுபாஷினிகள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதை யொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு உள்பிரகாரத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழா ஏற்பாடுகளை, அரைக்காசு அம்மன் ஊஞ்சல் சேவை அறநிலையத்தின் தலைவர் சத்தியபாமா ராமுக்கண்ணு, செயலர் எஸ். ரவிஅய்யர், பொருளர் டி.எச். ராஜேந்திரன், ஆடிட்டர் ஆர்.வி. விஜயராகவன் குழுவினர் செய்தனர்.