Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

பொற்பனை முனீஸ்வரர் கோயில் திருவிழா.. பக்தர்கள் வழிபாடு

புதுக்கோட்டை

பொற்பனைக்கோட்டையில் சிறப்ப அலங்காரத்தில் காட்சியளித்த பொற்பனைமுனீஸ்வரர்

புதுக்கோட்டை அருகிலுள்ள  அருள்மிகு பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகிலுள்ள  இந்து சமய  அறநிலையத்துறை  பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவை முன்னிட்டு காலையில் பொற்பனை முனீஸ்வரருக்கு   பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் தீபராதனை நடைபெற்றது.

பல்வேறு அபிஷேகம் நடைபெற்று மாலையில்  பொற்பனை முனீஸ்வரர் சந்தனக்காப்பு  மலர் அலங்காரத்திலும், பக்தர்களுக்கு  அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.    கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை    செயல் அலுவலர்  சந்திரசேகர்  மற்றும் வை.பழனியப்பன் பூசாரிஉள்ளிட்டோர் செய்தனர்.

இதில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தலைவர் குணசேகரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இக்கோயிலில் முனீஸ்வரர் சிலை ஏழடி உயரம் இரண்டரை அடி அகலத்தில் நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

காவல் தெய்வமாக இருப்பதால் கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்கும் இச்சிலையானது ஒரே கல்லால் அமைக்கப்பட்டது. கோயிலில் உள்ள பொற்பனைமுனீஸ்வரர்- காளியம்மனை வேண்டினால் திருமணம் மற்றும் குழந்தை பேறு உடனடியாக கிட்டும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

புதுக்கோட்டை அருகே ஒரு அடர்ந்த பாலை மரங்கள் அடங்கிய காடு இருந்தது. அதில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தபோது காட்டிற்குள் தன் மனைவியுடன் வேட்டையாட வந்த வேடன்இ மனைவியை விட்டு பிரிந்தார்.காணாமல் போன மனைவியை தேடி கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிருக்க, அப்போது அந்த முனிவர் வேடனை பார்த்து விவரம் கேட்க தன் நிலையை சொல்லி அழுதார் அந்த வேடன். முனிவர் தன்னுடைய தன் தவ பலத்தால் அந்த பெண் இருக்கும் இடத்தையும் கூறினார்.

அவ்வாறு சென்று மனைவியை அடைந்த வேடன். தினம் தோறும் அந்த முனிவருக்கு கிழங்குகள், பழங்கள் முதலியவற்றை வழங்கினார். இந்த பகுதியில் ஒரு தங்க பனைமரம் தோற்றும் என்றும், அந்த படை மரத்திலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்க பனம்பழம் விழும் என்றும், அதனை எடுத்து வாழ்க்கை நடத்தும் படி அந்த வேடனுக்கு முனிவர் கூறினார்.

அதேபோல் பனைமரம் தோன்றி அதிலிருந்து தங்க பனம்பழங்கள் விழுந்தன. இதன் மதிப்பு தெரியாத அந்த வேடன் அந்த பகுதியில் இருந்த ஒரு வர்த்தகரிடம் தங்கப் பனம்பழத்தை கொடுத்து தேவையானவற்றை வாங்கி வந்தார்.

இந்த விஷயம் சோழ மன்னனுக்கு கிடைக்க வணிகரை அழைத்து விவரங்களை கேட்ட அவர், வேடனிடமிருந்து பெற்று தங்க பனம்பழத்தைக் கொண்டு திருவரங்குலத்தில் சிவன் கோயிலை கட்டினார். தங்க பனைமரம் உருவாகி தங்கத்தில் பனம்பழம் கிடைத்ததால் இந்த பகுதி பொற்பனை கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

இந்த பொற்படைக்கு காவல் தெய்வமாக பொருட்படை முனிஸ்வரர் விளக்குகிறார். 14-ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் ஐந்தாவது மன்னராக ஆற்று புரிந்த தொண்டைமான் மன்னர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது.

இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முனீஸ்வரர் சிலை ஏழடி உயரம் இரண்டரை அடி அகலத்தில் நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. காவல் தெய்வமாக இருப்பதால் கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்கும் இச்சிலையானது ஒரே கல்லால் அமைக்கப்பட்டது.

கோயிலில் உள்ள பொற்பனை காளியம்மனை வேண்டினால் திருமண மற்றும் குழந்தை பேறு உடனடியாக கிட்டும் என்பது ஐதீகம். கோயிலில் இந்துக்கள் மட்டும் இன்றி இஸ்லாமியர்கள் மட்டும் செய்வது இன்றும் நடைபெற்று வருகிறது.

கோயிலின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் எக்காலகட்டத் திலும் தண்ணீர் இருந்து கொண்டு இருக்கிறது. கோயிலில் காளியம்மன் தலம் காத்த முனீஸ்வரர், முட்டாள் ராவுத்தர், நாகம்மாள் ஆகிய தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர்.

கோயிலில் அமைப்பு சிறியதாக இருக்கும் நிலையிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பொருட்பனை முனீஸ்வரர் விளங்கி வருகிறார். ஆடி மாதத்தில் இங்கு முப்பது நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுகிறது. கடைசி திருவிழாவின் போது ஏழு அடி உயர முனீஸ்வரருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து திருவிழா முடிக்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top