Close
நவம்பர் 22, 2024 8:50 காலை

புத்தகம் அறிவோம்… தமிழகக் காதல் கதைகள்.. ந. முருகேசபாண்டியன்

தமிழகம்

புத்தகம் அறிவோம்.. தமிழக காதல் கதைகள்

காதல் விநோதமானது; கவர்ச்சியானது; மாயமான முறையில் மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம்,விழைவு, தவிப்பு, காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம், மயக்கம் எனப் பல்வேறு உணர்வு நிலைகளில் காதல் ஏற்படுத்தும் அனுபவங்கள் அளவற்றவை.

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே காதல் எனும் மர்ம ஆறு சுழித்தோடிக்கொண்டிருக்கிறது. காதல் என்ற சொல்லுக்குள் புதைந்திருக்கும் பிரமாண்டமான ஆற்றல், சமூகத்தைக் காலந்தோறும் உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறது.

நான் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றியபோது, “நூலகத்தில் காதல் கதைகள் புத்தகம் இருக்கா சார்?” என்று மாணவிகள் அவ்வப்போது என்னிடம் கேட்ட கேள்விக்குச் சரியான புத்தகத்தைச் சொல்லமுடியாமல் திணறியிருக் கிறேன். யாருக்குத்தான் காதல் கதைகள் பிடிக்காமல் போகும்? சமகாலத்தில் எழுதப்பட்ட காதல் கதைகளைத் தொகுத்திட வேண்டுமென எடுத்த முடிவுதான் தமிழகக் காதல் கதைகள். என்ற தொகுப்பு நூலாகியுள்ளது.

காதலை முன்வைத்துச் சொல்லப்பட்டுள்ள இந்தக் கதைகள் வாசிப்பில் உங்களுக்கு ஏற்படுத்துகிற அனுபவங்கள் முக்கியமானவை. நீங்கள் இளமையான மனமுடன் இருந்தால், காதல் கதைகளை வாசிக்கும்போது, உங்களுக்குள் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கும்; மின்மினிப் பூச்சிகள் மின்னிடும்.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள மூத்த படைப்பாளர்களான கு.அழகிரிசாமி, மௌனி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோர் எழுதியுள்ள காதல் கதைகள் ஆண்டுகள் கடந்த பின்னரும் ஈரத்துடன் கசிகின்றன.

சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கிற கதைசொல்லிகள் வண்ணநிலவன், வண்ணதாசன், கோணங்கி, சேஷையா ரவி, வா.மு.கோமு, இந்திரா, பாஸ்கர்சக்தி, பாரதிபாலன், லக்ஷ்மி சரவணக்குமார், கணேசகுமாரன், கறுத்தடையான், சந்திரா, ஜி.கார்ல் மார்க்ஸ், கவிதா சொர்ணவல்லி, நர்சிம், யுவகிருஷ்ணா, அருணாராஜ், மித்ரா அழகுவேல் ஆகியோர் காதலை முன்வைத்து எழுதியுள்ள 29 சிறுகதைகள் வாசிப்பில் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

காதலை முன்வைத்துச் சொல்லப்பட்டுள்ள கதைகளை வாசிக்கையில் காதலர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியும் வேதனையும் ஏற்படுவது ஒருவகையில் விநோதம்தான். யதார்த்தத்தில் காதலர்களின் அனுபவங்கள், பிரதிகளின் வழியாகப் பதிவாகி, அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லப்படுகின்றன.தொடர்புக்கு: டிஸ்கவரி புக் பேலஸ், அலைபேசி எண்: 8754507070.

தமிழ்நாடு

#தொகுப்பு#

#முனைவர் ந.முருகேசபாண்டியன்#

# 9443861238 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top