ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில்கவிஞர் தங்கம்மூர்த்தி பிறந்த நாளை முன்னிட்டு வாசிப்போர் மன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பள்ளியில் வாசிப்போர் மன்றம் தொடங்கி வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. வாசிப்பேர் மன்றத்தின் ஐந்தாவது கூட்டம் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வாசிப்போர் மன்ற சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாணவர்கள் கவிஞர்தங்கம்மூர்த்தியின் கவிதைகளை விமர்சனம் செய்து பேசினர். கூட்டத்திற்கு வாசிப்போர் மன்றத்தலைவர் மாணவி அட்சயாஸ்ரீ தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பாரதிகலை மற்றும்அறிவியல் கல்லூரி பேராசிரியை க. உஷாநந்தினி கலந்து கொண்டார். வாசிப்போர் மன்றத்தில் கவிஞர்தங்கம் மூர்த்தியின் கவிதை நூல்களை வாசித்து மாணவர்கள் உரை நிகழ்த்தினர்.
”கூடு திரும்புதல் எளிதன்று”எனும் தலைப்பில் மதுஸ்ரீ அ. அதியன், ”தேவதைகளால்தேடப்படுபவன்” என்ற தலைப்பில் சர்விகா, மோகித் கிஷோர், “மழையின் கையெழுத்து” என்ற கவிதைத் தொகுப்பை ஹரியுகாஷ் என்ற மாணவனும்,
“என் பண்டிகை நாட்குறிப்பு”எனும் புத்தகத்தை கவிசாகர் மற்றும் கனிஷ்கா ஆகியோரும், “தங்கம்மூர்த்தி கவிதைகள்”எனும் நூலை கௌசிக் மற்றும் பொய் யெனப் பெய்யும்மழை” எனும் தலைப்பில் லோகித் என்ற மாணவரும் சிறப்பாக உரையாற்றி னர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமுஎகச நகரப் பொருளாளரும் கவிஞர்தங்கம்மூர்த்தி கவிதைகளை முனைவு பட்ட ஆய்வு செய்யும் பேராசிரியை உஷாநந்தினி பேசுகையில், இங்கே ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு கவிஞர் தங்கம்மூர்த்தியின் கவிதைகளை வாசித்து அவர்கள் பார்வையில் விமர்சனம் செய்தனர்.
கவிதையின் மீது அவர்களுக்கு இருக்கின்ற ஆர்வம் மட்டு மல்ல பாடப் புத்தகங்களைத் தாண்டி பல்வேறு நூல்களை வாசிக்கத் தூண்டுகின்ற பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலே காரணமாகும். இந்த வயதிலேயே கவிதைகளை விமர்சனம் செய்பவர்கள் வருங்காலங்களில் சிறப்பான நிலைக்கு உயர்வார்கள் என்று குறிப்பிட்டார்.
இந்தநிகழ்வில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, கோமதி, ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார், காசாவயல்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக வாசிப்போர் மன்ற துணைச் செயலாளர் மாணவி பவித்ரா வரவேற்றார். செயலாளர் ஷீபா நன்றி கூறினார். நிகழ்வை துணைத் தலைவர் மாணவி உதயரிஷினியா தொகுத்து வழங்கினார்.