Close
செப்டம்பர் 19, 2024 11:25 மணி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர்

மணிப்பூர் மற்றும் ஹரியானா கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மணிப்பூர் மாநில பாஜக அரசு இரண்டு இன மக்களிடையே மோதலை தூண்டிவிட்டு, அது மிகப் பெரும் கலவரமாக மாறி குக்கி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இதே போல ஹரியானா மாநிலத்தில் வசிக்கின்ற மத சிறுபான் மையின முஸ்லிம் மதத்தவர்கள் மீது கொடுமையான தாக்குதலை ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் இந்து மதவாத அமைப்புகள் நடத்தி வருகின்றன.

ஒன்றிய மோடி அரசு இந்த கலவரத்தையும் கட்டுப்படுத்த வில்லை, அடக்கவில்லை. மணிப்பூர் மற்றும் ஹரியானாவில் பாஜக கட்சி தான் ஆட்சி செய்து வருகின்றது. ஒன்றிய பிஜேபி அரசு அந்தந்த மாநில அரசுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் , முதல்வர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இந்த கலவரங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும், ஒட்டுமொத்த கலவரங்களுக்கும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை களுக்கும் ஒன்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயிலடி முன்பாக நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயினுல் ஆபிதீன் தலைமை வகித்தார்.

தஞ்சை சட்டமன்ற தொகுதி செயலாளர் அபுசாலிஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட பொருளாளர் எஸ்.இம்தியாஸ் அகமது, மாவட்ட துணை செயலாளர் ஜெ.பஷீர்அகமது, மாணவர் அணி அமைப்பாளர் எம் .ஜெ.முகமது உமர் அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உ.முகமது அன்வர் ஷரீப்,மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் எம்.சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதித்துறை இணை அமைச்ச ருமான எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக மாநில பொது குழு உறுப்பினருமான டி.கே.ஜி.நீலமேகம்,

மதிமுக மாவட்ட செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை எம்.ஹாஜாமைதீன் மிஸ்பாகி, தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி .ஜி.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ‌சேவையா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கோ.ஜெய்சங்கர்,

இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் ஒற்றுமை மேடை தலைவர், வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் அகமது கபீர்,தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாநகரத் தலைவர் எச்.அப்துல் நசீர்,

கிறிஸ்துவ நல்லிணக்க இயக்கம் மாவட்ட செயலாளர் மோசஸ் ஜான் கென்னடி, அறநிலை மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top