புதுக்கோட்டை நகராட்சியை முற்றுகை யிட்டு சிஐடியு போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை, ஆக.18:- தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர்சங்கச் (சிஐடியு) செயலாளர் கே.முகமதலி ஜின்னா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எஸ்.யாசிந்த், எம்.முத்தையா மற்றும் தொழிலாளர் பங்கேற்றனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.460, ஓட்டுநருக்கு ரூ.547 சம்பாளம் வழங்குவது, வருங்கால வைப்புநிதி பிடித்ததற்கான விபரப் பட்டியலை தனி நபருக்கு வழங்குவது, ஞாயிறு, புதன் இரண்டு நாட்களுக்க அரைநாள் வாரவிடுப்பு வழங்குவது, தீபாவளிக்கு ரூ.5,000 முன்பணமாகக் கொடுத்து மாதம்தோறும் ரூ.500 பிடித்தம் செய்வது உள்ளிட்ட உறுதிமொழி திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தகாரர் சார்பில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
புதுக்கோட்டை, ஆக.18:- தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர்சங்கச் (சிஐடியு) செயலாளர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எஸ்.யாசிந்த், எம்.முத்தையா மற்றும் தொழிலாளர் பங்கேற்றனர்.