Close
நவம்பர் 22, 2024 4:36 காலை

புத்தகம் அறிவோம்.. ரஸ்கின் எழுதிய Undo The Lost

புதுக்கோட்டை

காந்தியின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்

சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றிய புத்தகம் இந்த ரஸ்கின் எழுதிய Undo The Lost – “கடையனுக்கும் கடைத்தேற்றம்” காந்தியின் சுயசரிதை யில் உள்ள தலைப்பு -“உழைப்பவனுக்கு உற்சாகம்” என்று செல்லூர் கண்ணன் தலைப்பு தந்திருக்கிறார்.

இந்த நூல் காந்தியின் நண்பர் போலக்,தென்னாப்பிரிக்கா வின் ஜோகன்னஸ்பர்க் நகரத்திலிருந்து டர்பன் வரையிலான 24 மணி நேர ரயில் பயணத்தில் வாசிக்கக் கொடுத்தது .
காந்தி தனது “சத்திய சோதனை”யில் “ஒரு நூலின் மந்திர சக்தி” என்று தலைப்பிட்டு இந்த நூலைப்பற்றி எழுதியிருக்கிறார்.

இந்த நூலை படிக்க ஆரம்பித்த பின் நடுவில் கீழே வைக்க முடியவில்லை. அது என் உள்ளம் முழுவதையும் கவர்ந்து கொண்டுவிட்டது. ஜோகன்னஸ்பர்க்கிற்கும் டர்பனுக்கும் இடையில் 24 மணி நேரப் பயணம். ரெயில் அங்கே மாலையில் போய்ச்சேர்ந்தது.

அன்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. அந்நூலில் கண்ட லட்சியங்களுக்கு ஏற்றவகையில் என் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு விடுவது என்று தீர்மானித்தேன்….என் வாழ்க்கையில் உடனேயே நடைமுறையான மாறுதலை உண்டாக்கிய நூல் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ .பின்னர் அதைக் குஜராத்தி மொழியில் ‘சர்வோதயம்’ (சர்வஜனநலம்) என்ற பெயருடன் வெளியிட்டேன்.

“கடையனுக்கும் கடைத்தேற்றம்” என்ற நூல் பின் வருவன வற்றை போதிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

1. எல்லோருடைய நலனில் தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது.
2. தன் உழைப்பினால் ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளுவதற்கு எல்லோருக்குமே ஒரே மாதிரியான உரிமை இருப்பதால் க்ஷவரத் தொழிலாளியின் வேலைக்கு இருக்கும் அதே மதிப்புதான் வழக்கறிஞர் வேலைக்கும் உண்டு .” எந்த வேலையும் இழிவானதல்ல”
3. ஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், அதாவது நிலத்தில் உழுது பாடுபடும் குடியானவரின் வாழ்க்கையும் கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே வாழ்வதற்கு மேன்மையான வாழ்க்கைகள்…
பொழுது புலர்ந்ததும் நான் எழுந்து இந்தக் கொள்கையை நடைமுறையில் கொண்டு வரத்தயாரானேன்.” -( சத்திய சோதனை பக்.369,370.) என்கிறார் காந்தி.

செல்லூர் கண்ணனின் இந்த மொழிபெயர்ப்பு சிறப்பாகவும் அனைவரும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலும் உள்ளது. வெளியீடு-அருணா பப்ளிகேஷன்ஸ்,சென்னை. 94440 47790.

#பேராசிரியர் விஸ்வநாதன்- வாசகர் பேரவை# புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top