Close
செப்டம்பர் 20, 2024 3:35 காலை

நகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இந்தப் பகுதிகளில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்குகள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதைத் தடுத்த வேண்டும்.
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதி முழுவதும் தடையின்றி தினமும் குடிநீர் வழங்க சிறப்புத் திட்டத்தைத் தீட்டி செயல்படுத்த வேண்டும். விரிவடைந்த பகுதிகளில் இன்னமும் பல நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலம் போக்கப்பட வேண்டும்.
புதுக்கோட்டை வாரச்சந்தை, மீன் மார்க்கெட்டில் கழிவுநீர் வெளியேறுவதற்கு உரிய வடிகால் தளம் அமைத்து அவ்வப்போது தூய்மைப்படுத்து தொற்றுநோய் பரவும் அபாயத்தைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்டத் துணைச் செயலர் ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். தேசியக் குழு உறுப்பினர் வை. சிவபுண்ணியம், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க. மாரிமுத்து, மாவட்டச் செயலர் த. செங்கோடன், மாவட்டத் துணைச் செயலர் கே.ஆர். தர்மராஜன், பொருளாளர் என்.ஆர் ஜீவானந்தம் உள்ளிட்டோரும் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top