Close
செப்டம்பர் 20, 2024 5:36 காலை

காமராஜர் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநராக ஐரீன் சிந்தியா பொறுப்பேற்றார்

சென்னை

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட ஜே.பி.ஐரீன் சிந்தியா

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக ஜே.பி.ஐரீன் சிந்தியா திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவனச் சட்டங்களின் அடிப்படையில் இயங்கி வரும் எண்ணூர் காமராஜர் துறைமுகம் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமாகும்.

மத்திய அரசு, சென்னைத் துறைமுகத்தின் கூட்டாண்மை நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இத்துறைமுகத்தின் மத்திய அரசின் பங்குளை முழுமையாக வாங்கியதை யடுத்து காமராஜர் துறைமுகத்தை சென்னைத் துறைமுகம் முழுமையாகக் கையகப்படுத்தியது.

இதனையடுத்து சுனில் பாலிவால் சென்னைத் துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவராக நீடிக்கும் நிலையில் காமராஜர் துறைமுகத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக .ஜே.பி.ஐரீன் சிந்தியாநியமிக்கப்பட்டதை யடுத்து அவர் திங்கள்கிழமை முறைப்படி பொறுப்பேற்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஐரீன் சிந்தியா 2008-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வில் மத்திய பிரதேச மாநில பிரிவில் பணி ஒதுக்கப்பட்டது.   சென்னை பல்கலைக் கழகத்தில் நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் பெற்ற சிந்தியா குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் நுண் பொருளாதாரத்தில் உயர் பட்டம் பெற்றுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் சத்னா மாவட்ட உதவி ஆட்சியர். சிந்தியா பர்கான்பூர், பன்னா மாவட்ட ஆட்சியர்,   போபால் மாவட்ட பஞ்சாயத்து செயல் அலுவலர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இம்மாநிலத்தில் பணியாற்றியபோது  சிறப்பாகப் பணியாற்றிமைக்காக பல்வேறு சிறப்பு விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்ற ஐரீன் சிந்தியாவை சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங் களின் தலைவர் சுனில் பாலிவால், சென்னைத் துறைமுகத் தின் துணைத் தலைவரும் ஐரீன் சிந்தியாவின் கணவருமான எஸ்.விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top