திமுக நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது, அரசியல் நாடகம் என்றார் ஜி.கே. வாசன்
திமுக நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது, அரசியல் நாடகம் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர் களிடம் மேலும் பேசியதாவது:நீட் விஷயத்தில் திமுகவினர் மக்களிடம் தவறான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, அதனை உறுதிப்படுத்துவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். இது நாட்டுக்கு நல்லதல்ல.
மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். திமுக நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது,
காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விஷயத்தில், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்காமல், திமுக அரசு அரசியல் லாப நஷ்டக் கணக்கு பார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல.
மகளிர் உரிமைத்தொகை என்ற திட்டம் பெண்களில் பெரும்பாலானவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விஷயங்களில் தேக்க நிலை நீடிக்கிறது. மக்கள் இவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் வரப் போகிறது. இன்னும் மாநில அரசின் மீதான எதிர்மறையான வாக்குகள் அதிகரிக்கப் போகின்றன.
கடந்த தேர்தலில் மக்கள் எதிர்பார்த்து ஏமாந்து போனதைப் போல, மீண்டும் மீண்டும் ஏமாற மாட்டார்கள். பாடம் புகட்டுவார்கள் என்றார் ஜி.கே.வாசன்.