Close
நவம்பர் 22, 2024 12:07 மணி

ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கையைக் கண்டித்து செப்- 12, 13, 14 ல் மாநிலம் தழுவிய மறியல்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு கூட்டத்தில் பங்கேற்றோர்

ஒன்றிய  அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து மோடியே வெளியேறு என்ற முழக்கத்தோடு செப்டம்பர் 12, 13, 14 -ல் நடைபெறும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தை தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி 3 மையங்களில் 5000 பேர் மறியல் போராட்டத்தில்  ஈடுபடுவதென  தஞ்சையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வீர மோகன் தலைமையில்  செவ்வாய்க்கிழமை (22~8~23) மாலை தஞ்சாவூர் கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தேசிய குழு உறுப்பினர் வை.சிவபுண்ணியம் மாநில நிர்வாக குழு முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி நடக்க இருக்கின்ற மறியல் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கியும், மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பதற்கான திட்டங்களையும் முன்வைத்து உரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் கோ.சக்திவேல், பொருளாளர் ந.பாலசுப்பிரமணியம், நிர்வாக குழு உறுப்பினர்கள் சி. சந்திரகுமார், தி. திருநாவுக்கரசு, வெ. சேவையா, ஆர்.ராமச்சந்திரன், ரெ. கோவிந்தராஜன் , அ.கலியபெருமாள், ம.விஜயலெட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் பூதலூர் ஆர்.ஆர்.முகில், ஒரத்தநாடு வாசு. இளையராஜா, பட்டுக்கோட்டை பூபேஷ் குப்தா, திருவோணம் பால்ராஜ், தஞ்சாவூர் ஆர். பிரபாகரன், சேதுபாவா சத்திரம் அ.எஸ்தர்லீமா லீமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒன்றியஅரசு ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எதிராக கார்பரேட்டுக்கு ஆதரவான கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. மக்களிடையே சாதி மத. உணர்வுகளை தூண்டி விட்டு, கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகின்ற ஆர்எஸ்எஸ், பிஜேபி பின்னணியில் செயல்பட்டு வருகிறது.

விலைவாசி கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது, இருக்கின்ற வேலை பறிக்கப்படுவ:தோடு புதிய வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. சிஏஜி அறிக்கையின்படி பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது வெளியிடப்பட் டுள்ளது.

எனவே மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக மோடி அரசு மாற்றப்பட வேண்டும் என்று முழக்கத்தோடு நடைபெறுகின்ற மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெற்கு மாவட்ட குழு கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top