Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூபாய் 21ஆயிரமாக வழங்க ஏஐடியுசி கோரிக்கை

தஞ்சாவூர்

கும்பகோணத்திலுள்ள மேலாண் இயக்குநர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த ஏஐடியுசி தொழில்சங்க நிர்வாகிகள்

15 -ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூபாய் 21 ஆயிரமாக வழங்க வேண்டும் ஏஐடியுசி தொழில்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கும்பகோணம் மேலாண் இயக்குநரிடம் ஏஐடியூசி சார்பில் அளிக்கப்பட்ட மனு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து (1.20லட்சம்) இருபதினாயிரம் தொழிலாளர்கள், பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் பேசப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த 14 -ஆவது ஊதிய ஒப்பந்தம் நான்காண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 31.8. 23 உடன் முடிவடைகிறது.

1‌.9.2023 முதல் 15 -ஆவது ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கான பேச்சு வார்த்தையை தாமதம் செய்யாமல்  உடனடியாக தொடங்க வலியுறுத்தி  தமிழ்நாடு அரசுக்கு கும்பகோணம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் ஏஐடியூசி நிர்வாகிகள் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்த கோரிக்கையை அளித்தனர்.

ஒப்பந்த கோரிக்கையில் இரவு பகல் , மணி நேரம் பாராது,பசி தூக்கமின்றி, தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் அனைத்தை யும் முழுமையாக நிறைவேற்றி, பணிபுரிந்து வரும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு, 15 -ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களுக்கு இணையாக தற்போது தொழிலாளர்கள் பெற்று வரும் அடிப்படைச் சம்பளத்தில் 25% உயர்வு அளித்து, அடிப்படைச் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

குறைந்தபட்ச சம்பளம் ரூபாய் 21,000 ஆக நிர்ணயம் செய்யவும், கடந்த 14 -ஆவது ஊதிய ஒப்பந்தம் பேசப்பட்ட பொழுது மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததை  நான்காண்டுகளாக நீட்டிக்கப்பட்ட தைக் கைவிட்டு, மீண்டும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்த என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும்.

தொழிலாளர்களின் பணி நேரங்கள் சட்டப்படி வரைமுறை செய்ய வேண்டும்,மக்களுக்கு இரவு பகல் பாராது பயணச் சேவை அளித்து வரும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டோல்கேட் சுங்கவரி, டீசல் ,இருகைவரி, வாகன வரிகள் ரத்து செய்ய வேண்டும்.

நாளுக்கு நாள் ஏற்படுகின்ற கூடுதல் செலவினங்களை போக்குவரத்து கழகங்களுக்கு, அரசு வழங்க வேண்டும், பிஎஃப் டிரஸ்ட் மூலம் தற்பொழுது பெற்று வரும் ஓய்வூதியத் தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும், 1.4.2003  -க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் அமல்படுத் தப்பட வேண்டும்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2015 ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் அரசு மேல்முறையீடு செய்துள்ளதை திரும்ப பெற்று ,பழைய புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு பேசப்படும் ஊதிய ஒப்பந்த உயர்வு பலன்கள் ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும், வாரிசு பணி ஆண்டுதோறும் வழங்க வேண்டும், ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்டு காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும்.

ஒப்பந்த, தனியார் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப் படும் முறை கைவிடப்பட வேண்டும், நீண்ட கால பழைய பேருந்துகள் அனைத்தையும் மாற்றி புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு கும்பகோணம் மேலாண் இயக்குநரிடம் அளிக்கப்பட்டது.

15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தாமதமின்றி அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண தமிழ்நாடு அரசையும், கழக நிர்வாகங்களையும் ஏஐடியூசி வலியுறுத்துகிறது என்று மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஏ ஐ டி யூ சி மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம், மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், கும்பகோணம் கழக ஏ ஐ டி யூ சி பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், மாநில குழு உறுப்பினர் தி.கஸ்தூரி, பொருளாளர் சி.ராஜா மன்னன், நிர்வாகிகள் பி.அழகிரி, டி.தங்கராசு, ஆர்.இளங்கோவன், ஆர்.ரங்கதுரை, என் . அசோகன் ஆகியோர் ஒன்றிணைந்து  வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top