ஞானாலயா” பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை புத்தகத் திருவிழாக் குழுவினர் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வழங்கி வாழ்த்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழா ஜூலை.28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலை இலக்கிய ஆளுமைகளுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் பா.கிருஷ்ணமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர் ஜெ.ராஜாமுகமது, கல்வெட்டு, தொல்லியல் ஆய்வாளர் கரு.இராசேந்திரன், மூத்த எழுத்தாளர் செம்பை மணவாளன், மூத்த தமிழறிஞர் துரை மதிவாணன், மூத்த எழுத்தாளர் ப.உமாபதி ஆகியோர் விருதாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
இவர்கள் அனைவருக்கும் 5.8.2023 சனிக்கிழமை -அன்று நடைபெறும் நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று விருதுகள் வழங்கினார்,
இதில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் பா. கிருஷ்ணமூர்த்தி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க இயலவில்லை.
இதையடுத்து, புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பழனியப்பா நகரிவ் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகம் அருகிலுள்ள அவரது இல்லத்துக்கு புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் நேரில் சென்று அறிஞர் பா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில்,”தமிழ்ச்செம்மல்”கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் பேராசிரியர் சா. விஸ்வநாதன், கவிஞர் ராசி பன்னீர்செல்வன், அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்
.டி.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் . மணவாளன், மாவட்டத் தலைவர் வீரமுத்து, கவிஞர் பீர்முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவரையும், அவரது இணையர் மொழிபெயர்ப்பாளர் டோரதி கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.