Close
செப்டம்பர் 20, 2024 4:41 காலை

புத்தகம் அறிவோம்… தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

சமீபத்திய நான்குனேரி சம்பவத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் காந்தி புத்தகத்தை வாசிக்கச் சொல்லத் தோன்றியது.

1934 ஆம் ஆண்டில் தீண்டாமை எதிர்ப்பு பிரசாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க எட்டு மாத காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காந்தி. அவருடைய பயணம் தொடங்கிய இடம் தமிழ்நாடு, கன்னியாகுமரி. 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாடு முழுவதும் வலம் வந்தார். வில்வண்டி, நான்கு சக்கர வாகனம், புகைவண்டி என்று எல்லாவிதங்களிலும், 2000 மைல் பயணம் செய்து 112 ஊர்களில் மக்களைச் சந்தித்திருக்கிறார்.2 கோடி மக்கள் அவரை நேரில் பார்த்திருக்கின்றனர். அவருடைய தீண்டாமைக்கெதிரான உரையைக் கேட்டிருக்கின்றனர்.

காந்தி தனது முதல் நாள் பயணத்திலேயே நாங்குநேரி வந்திருக்கிறார். நாங்குநேரி தேசபக்தர் ஸ்ரீநினிவாச ஐய்யங்கார் காந்தியை மக்கள் பார்க்க எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். மக்கள் திரளாக கூடியிருந்திருக்கின்றனர்.அன்றிரவு மரத்தில் மனிதர்களாக காய்த்து தொங்கிக் கொண்டிருந்தார்கள். கோயில், மதில், கதவு எல்லாம் மனித மயமாகத் தெரிந்தன என்கிறார் தி.செ.சௌ. ராஜன்( பக். 20.)

டாக்டர்.தி.சே.சௌ. ராஜன்( T.S.S.ராஜன்) காந்தியின் இந்த பயணம் முழுவதையும் திட்டமிட்டு நடத்தியவர்.TSS. மிகச்சிறந்த தேசபக்தர். சுதந்திரப் போராட்ட வீரர். அவருடைய சுயசரிதமான எனது நினைவலைகள் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.  தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் இப்பயணத்தின் நோக்கம், நடந்த நிகழ்வுகள் யாவற்றையும் அறியவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதியதாக குறிப்பிடுகிறார் டாக்டர் .TSS .

ஆனந்தவிகடனில் கட்டுரையாக எழுதப்பட்டதை நூலாக்க உரிமை பெற்று கலைமகள் வழி நூலாக 1944 -ல் வெளியிட்டிருக்கிறார். தற்போது 2012 -ல் சந்தியா பதிப்பகம் மறுபதிப்பு செய்திருக்கிறது.

குற்றாலத்திற்கு சென்றிருந்தபோது ஹரினங்கள் குளிக்க தடையிருந்ததை அறிந்து” என்றைய தினம் எனது ஹரிஜன சகோதரர்கள் அருவியில் மற்றவர்களைப்போல் ஸ்நானம் செய்ய அநுமதிக்கப்படுகிறார்ளோ அன்றைய தினம் எனக்கு ஸ்நானம்” என்று அருவியில் குளிக்கவில்லை காந்தி. பக்.23.

இந்தப் பயணம் முழுவதும் அவர் வலியுறுத்திய செய்தி…
தீண்டாமை என்னும் பழக்கத்திற்கு சாஸ்த்திரத்தில் ஆதாரம் இல்லை. சனாதன தர்மம் என்ற ஹிந்து மதம் உயிர்வாழ வேண்டுமானால் தீண்டாமை என்னும் கொடிய வழக்கம் ஒழியவேண்டும் .தீண்டாமை ஒழியாவிட்டால் ஹிந்துமதம் அழிந்துவிடும் என்பதே. காந்தி சென்ற இடங்களின் வரலாற்றுச் செய்திகளையும் TSS சுவைபட எழுதியிருப்பது இந்நூலின் தனிச் சிறப்பு.சந்தியா பதிப்பகம் சென்னை.

# சா. விஸ்வநாதன்-வாசகர் பேரவை-புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top