Close
நவம்பர் 22, 2024 4:36 மணி

கந்தர்வகோட்டை ஒன்றிய வேம்பன்பட்டி நடுநிலைப்பள்ளியில் சர்வதேச நீர் வாரம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றிய வேம்பன்பட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்த சர்வதேச நீர் வாரம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வேம்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்வதேச நீர் வாரமும், துளிர் திறனறிவுத் தேர்வு எழுதிய மாணவர் களுக்கு துளிர் மாத இதழும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு, தலைமை ஆசிரியர் ராமஜெயம் தலைமை வகித்தார்.கணித பட்டதாரி ஆசிரியர் ரவி வரவேற்றார். இதில்,  தமிழ்நாடு அறிவியல் கந்தர்வக் கோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா  பேசியதாவது:

உலக நீர் வாரம் என்பது ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் வாட்டர் இன்ஸ்டிடியூட் ஏற்பாடு செய்துள்ள உலகளாவிய நிகழ்வாகும்.

உலக தண்ணீர் வாரம் 2023 கருப்பொருள்மாற்றத்தின் விதைகள் நீர் சார்ந்த உலகத்திற்கான புதுமையான தீர்வுகள்
இந்த ஆண்டு நிகழ்வானது நீர் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை குறிக்கின்றது.

மாணவர்கள் தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களிடையே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் , மழைக்காலங்களில் மழை நீரை சேகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு மாதந்தோறும் வெளிவரக்கூடிய துளிர் மாத இதழை வாசிக்க வேண்டும். துளிர் மாத இதழில் தங்களுடைய படைப்புகளை அனுப்பலாம். துளிர் இதழை வாசிப்பதனால் அறிவியல் மனப்பான்மை வளரும் என்றார் அவர்‌. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிவகலா, கிருஷ்ணம்மாள், நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top