Close
நவம்பர் 22, 2024 11:33 காலை

சிவகங்கை அருகே காலை உணவு திட்டம்:அமைச்சர் பெரியகருப்பன் தொடக்கம்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் காலை உணவுத்திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

தமிழ்நாடு  முழுவதும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக் கான விரிவு படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 946 பள்ளிகளை சார்ந்த 35,993 மாணவ செல்வங்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது –

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், திருப்பத்தூர் ஒன்றியம், கண்டவராயன்பட்டி ஊராட்சி ஒன்றியப் தொடக்கப் பள்ளியில், மாணாக்கர்களுக்கு காலை உணவினை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர், 1 முதல் 5 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விரிவு படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை  இன்றைய தினம் தொடங்கி வைத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கண்டவராயன்பட்டி ஊராட்சி ஒன்றியப் தொடக்கப் பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா , மாணாக்கர்களுக்கு காலை உணவினை வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்.

பின்னர், கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், டாக்டர் கருணாநிதி,வழியில் சிறப்பான ஆட்சியினை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், முன்னதாக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை விரிவு படுத்திடும் நோக்கில் இன்றைய தினம் நாகை மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சமூக சிந்தனையுடன் சிந்தித்து, இதுபோன்று புதிதாகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் கள். பெற்றோர்களின் சுமையை குறைக்கும் பொருட்டும். பிள்ளைகளின் பசியை போக்கிடும் பொருட்டும். இதனை அரசிற்கு செலவாக கருதாமல் முதலீடாகவும் மூலதனமாகவும் கருதி, மாணவர்களின் பெற்றோராக திகழ்ந்து இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி உள்ளார்.

கடந்த 1920 ஆம் ஆண்டு முதல் மதிய உணவு திட்டம் செயல் படுத்தப்பட்டு வந்தது. பெருந் தலைவர் காமராஜர் , எம்.ஜி.ஆர் ஆகியோர்களால் மதியஉணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அத்திட்டத்திற்கு சிறப்பு சேர்த்திடும் பொருட்டு , சத்தான உணவு வழங்கிடும் அடிப்படை யில், டாக்டர் கருணாநிதி, வாரத்தில் 5 தினங்கள் முட்டையுடன் கூடிய சத்தான உணவு வழங்கப் பட்டது

அவ்வழியில், தமிழ்நாடு முதலமைச்சர், மதிய உணவு மட்டுமன்றி, 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு சிற்றுண்டி திட்டத்தினையும் அறிவித்து, அதனை விரிவு படுத்திடும் நோக்கில், மாநிலம் முழுவதும் 20 இலட்ச மாணவ செல்வங்களுக்கு பயனுள்ள வகையில் மொத்தம் 404 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 867 பள்ளிகளிலும் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 32 பள்ளிக ளிலும் என, மொத்தம் 899 பள்ளிகளை சார்ந்த 33,782 மாணவர்களும், முன்னதாக  ,தமிழ்நாடு முதலமைச்சர் , கடந்த 16.09.2022 அன்று  தொடங்கி வைக்கப் பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் முன்னதாக பயன் பெற்று வரும் எஸ்.புதூர் வட்டாரத்திற் குட்பட்ட 47 பள்ளிகனை சார்ந்த 2,908 மாணவ செல்வங்களை யும் சேர்த்து ஆக மொத்தம் இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 946 பள்ளிகளை சார்ந்த 35,993 மாணவ செல்வங்களுக்கு பயனுள்ள வகையில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் நிதி முதலீடாகவும் மூலதனத்துடனும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விரிவு படுத்தப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ள இத்திட்டமானது சிவகங்கை மாவட்டத்தின் மேற் குறிப்பிட்டுள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணியில், ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்கள் அந்தந்த பள்ளிகளிலுள்ள சமையலறை யினை சுத்தமாகவும் சுகாதார மாகவும் பராமரித்து தாங்கள் சமையல் செய்யவுள்ள ஒவ்வொரு பொருட்களின் காலாவதி தேதியினை சரிபார்த்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து துறைக ளை சார்ந்த அலுவலர்கள் மட்டுமன்றி சம்மந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் திட்ட செயல்பாடுகள் குறித்தும் உரிய களஆய்வுகள் மேற்கொள்வார்கள்.

இதனை கருத்தில் கொண்டு திட்டத்தின் வெற்றிக்கு ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச் சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சோ.சண்முகவடிவேல், உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் பிரபாவதி,

ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் வெண்ணிலா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.பாலுமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆர்.ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் வ.ஜெயபாரதி, கண்டவராயன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அபிராமிகாந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top