Close
செப்டம்பர் 20, 2024 6:44 காலை

வடசென்னை பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: எம்.எல்.ஏ.க்கள் தொடக்கம்

சென்னை

திருவொற்றியூர் ராமநாதபுரும் சென்னை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர்.

தமிழக அரசின காலை சிற்றுண்டி திட்டத்தை வடசென்னை யில் பல்வேறு பள்ளிகளில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனர்.

தமிழக அரசு சார்பில் சுமார் 30 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தொடங்கி வைக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து ராயபுரம் தொகுதி மணிகண்டன் தெருவில் அமைந்துள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டியை வழங்கி அவருடன் அமர்ந்து உணவருந்தினார். உடன் மாமன்ற உறுப்பினர் நிரஞ்சனா, திமுக நிர்வாகிகள் கண்ணன், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

திருவொற்றியூர் ராமநாதபுரத்தில் அமைந்துள்ள சென்னை தொடங்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை சட்டப் பேரைவை உறுப்பினர் கே.பி.சங்கர் தொடங்கி வைத்தார் அவருடன் மாமன்ற உறுப்பினர்கள் எம். எஸ்.திரவியம், ஆர்.ஜெயராமன், திமுக நிர்வாகிகள் வி.ராமநாதன், ஆர்.டி.மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர் தேரடி சந்நிதி தெருவில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிற்றுண்டியை வழங்கினார். எர்ணாவூரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மேற்கு பகுதி செயலாளர் வை.ம.அருள்தாசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.

கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம், மீனம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆர்.கே.நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் தொடக்கப் பள்ளியில் தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கி வைத்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top