Close
நவம்பர் 22, 2024 2:34 மணி

புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.: ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட நூலகத்தில் ஆட்சியர் மெர்சி ரம்.யா தலைமையில் நடைபெற்ற நூலகர் தின விழா

நூலகர் தின விழாவில்சிறப்பாக பணிபுரிந்த நூலகர்களுக்கு
மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் மாவட்ட மைய நூலகவாசகர் வட்டம் இணைந்து நடத்தியநூலகர் தின விழாவில் சிறப்பாக பணிபுரிந்த நூலகர்களுக்கும்மற்றும் அதிகளவில் புரவலர்களை சேர்த்த நூலகர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  (25.08.2023) பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சென்ற நிதியாண்டில் முழுநேர கிளை நூலகம் கிளை நூலகம்ஊர்ப்புற நூலகம் மற்றும் பகுதிநேர நூலகங்களில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கை புரவலர்சேர்க்கை மற்றும் தளவாடங்கள் பெறுவதில் முனைப்புடன் செயல்பட்ட நூலகர்களுக்கும் கேடயம் வழங்கியும் நூலகர்களுக்காக நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற நூலகர்களுக்கும் பரிசும் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது;
பொதுமக்கள் அனைவரும் புத்தகம் படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும்நமது ஆர்வத்தினை தூண்டும் வகையிலும்ரூபவ் ஒருவரது கவனத்தை ஈர்க்கும் வகையிலும் புத்தகங்களை தேர்ந்தெடுத்துபடிக்க வேண்டும்.

குறைவான செலவில் நிறைவான தகவல்களை பெறுவதற்காக பொதுமக்கள் நூலகத்தினை அதிகஅளவில் பயன்படுத்திட வேண்டும். கிராமப் புறங்களில் உள்ள நூலகங்களிலும் அடிப்படை வசதிகள் மற்றும் அதிகஎண்ணிக் கையிலான புத்தகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் பொதுமக்களின் நூலகபயன்பாட்டினை அதிகரிக்க முடியும். இணையதள பயன்பாட்டில் மூழ்கி இருக்கும் இன்றைய கால சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் விதமாக அவர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.

எனவே பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நூலகத்திற்குசென்று நல்ல நூல்களை படிப்பதன் மூலம் நம்மை நாமே நல்வழிப்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர்மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் (கூ.பொ.) சிவக்குமார், வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் வாசகர் பேரவை செயலர்  சா. விஸ்வநாதன், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top