Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

ரூ 50 ஆயிரத்தை அள்ளலாம்.. அஞ்சல் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டியில் வென்றால்

புதுக்கோட்டை

தபால்துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி

அஞ்சல் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டியில் அசத்தலாக கடிதம் எழுதினால் ரூ.50 ஆயிரம் பரிசு காத்திருக்கிறது. அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.

புதுக்கோட்டை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் பி.முருகேசன் அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்:
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2023 ம் ஆண்டு, ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 வரை நடத்தப்படுகிறது.

போட்டியில் பங்கேற்க  அனைத்து வயதினரும் (18 வயது வரை ஒரு பிரிவாகவும் 18 வயதுக்கு மேல் ஒரு பிரிவாகவும்) வரவேற்கப்படுகின்றனர்.
போட்டிக்கான கடிதத்தை “புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா – DIGITAL INDIA FOR NEW INDIA” என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் உள்நாட்டு கடிதம் (Inland Letter Card – Rs.2.50/-) or கடித உறை (Envelope –Rs.5/-) பிரிவில் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம் , சென்னை – 600 002 (THE CHIEF POSTMASTER GENERAL, TAMILNADU CIRCLE, CHENNAI -600 002) என்ற முகவரிக்கு தபால் அலுவலகம் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

உள்நாட்டு கடித பிரிவில் (Inland Letter Card) 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் (Envelope) 1000 வார்த்தைக ளுக்கு மிகாமலும் கைப்பட எழுதி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

18 வயது நிறைவு பெற்றவர் அல்லது நிறைவு பெறாதவர் என்ற வயது சான்று கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். போட்டியில் பங்கு பெறுவோரின் பெயர் மற்றும், இருப்பிட முகவரியை கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும். மாணவர்கள் பள்ளியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம் / ரூ.50 ஆயிரம், 2 ம் பரிசு ரூ.10 ஆயிரம் / 25 ஆயிரம், 3 ம் பரிசு ரூ.5 ஆயிரம் / ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் போட்டியில் பங்கு பெறுவதன் மூலம் புதிய இந்தியாவுக்கான வழிகாட்டியாக திகழக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்  என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top