முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், தேர்வு செய்யப்பட்ட 226 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து நடத்திய , சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், தேர்வு செய்யப்பட்ட 226 பேருக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா 26.08.2023) வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்திட முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்கள்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தற்போது நடத்தப்பட்டது. இம்முகாமில் 116-க்கும் மேற்பட்ட வேலையளிப்போர் கலந்து கொண்டுவேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நேர்காணல் நடத்தினர். இம்முகாமில், 1114 ஆண்கள், 1423 பெண்கள், மாற்றுத்திறனாளிகள் 37 பேர் உள்பட மொத்தம் 2474 பேர் கலந்து கொண்டனர். 94 ஆண்கள்,132 பெண்கள் உள்பட 226 பேர் தேர்வு செய்யப்பட்டு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும், மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, RSETI, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தாட்கோ போன்ற துறைகளால் சிறப்பு அரங்கங்கள் அமைக்கப்பட்டு அரசின் நலத்திட்ட எடுத்துரைக்கப்பட்டது.
உதவிகள் குறித்து விரிவாக வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கு இவ்வேலை வாய்ப்பு முகாமுடன் இணைந்து நடத்தப்படும் இளைஞர் திறன் திருவிழாவின் மூலம் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட குறைந்தது 5 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த ஆண், பெண் இருபாலருக்கும் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கென உள்ளுர் மற்றும் வெளியூரில் உள்ள 15க்கும் மேற்பட்ட இலவச திறன் பயிற்சிகளை வழங்க கூடிய DDU-GKY திட்ட பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு v Home Health Alde (Nursing), Food & Beverage Service Trainee, RestaurantCaptain, Food Products Packaging Technician, Retail Team Leader, Web Developer, Assistant Beauty Therapist, Beauty Therapist, CNC Operator Turning, Field Technician Computing Peripherals, Senior Associate Desktop Publishing, Warehouse Quality Checker cum Documentation Executive உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கு 11 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மூன்று மாதம் முதல் ஆறு மாத கால பயிற்சிக்கு பின் தனியார் முன்னனி தொழில் நிறுவனங்களில் குறைந்தபட்சம் ரூ.13,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். திறன் பயிற்சி பெற்று வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்ப முள்ள 68 பேர் தங்களது பெயரினை பதிவு செய்து உரிய ஆலோசனை பெற்றுக் கொண்டனர்.
கடந்த 2021-2022 மற்றும் 2022-2023 ஆண்டுகளில் இதுவரை மகளிர் திட்டம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் 23 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 3,690 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை, வேலைவாய்ப் பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வா தாரத்தினை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ளலாம் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) இர.தேவேந்திரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொது) மோ.மணிகண் டன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பெ.வேல் முருகன், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் சுகந்தி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்) சு.இராமர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.