அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை சார்பாக நவரத்தினா திட்டம்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது குறித்து அகில இந்திய மகாத்மாகாந்தி சமூகநலப் பேரவை யின் நிறுவனர் முனைவர் வைர.ந.தினகரன் வெளியிட்ட செய்திகுறிப்பு
நாட்டில் நடக்கும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொள்ளும் போது மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்பு கிறார்கள். ஆனால் அதை யார் மூலம் எப்படி கொண்டு வருவது என்று தெரியாமல் மக்கள் பல ஆண்டுகளாக குழப்பத்தில் உள்ளது தெளிவாக தெரிகிறது.
மக்களின் குழப்பத்தை போக்கி மாற்று அரசியலுக்கு வழி காட்டுவதென அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை சார்பாக முடிவு செய்து அதற்கான முதற்கட்டமாக நவரெத்தினா என்ற திட்டத்தை மக்களுக்கு அறிமுகம் செய்கிறது.
நவரெத்தினா திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள் முதலாவது புதுக்கோட்டை நகரில் உள்ள காந்தி பூங்காவை மீட்பது, புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீட்பது மற்றும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திலகர் திடலை மீட்டு மேம்படுத்தி அங்கு வந்து பேசிய சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவை போற்றும் விதமாக மிகப் பெரிய நினைவிடம் மற்றும் அரங்கம் அமைப்பது.
இரண்டாவதாக தேர்தல் சீர்திருத்தங்களை வரும் மக்களவை தேர்தலுக்குள் கொண்டுவர இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவது. மூன்றாவதாக, மாற்று அரசியலுக்கான திட்டத்தை வகுத்து அதை கிராம அளவில் கொண்டு சென்று கிராமநலகமிட்டிகளை அமைத்து மக்களே மக்களுக்கான அரசை அமைத்துக் கொள்ள பயிற்சியும், ஆலோசனை களையும் வழங்குவது.
நான்காவதாக,மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல அனைத்து விதமானவளர்ச்சி திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்துவது. ஐந்தாவதாக நீர் மேலாண்மை மற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி நியாயவிலை நிர்ணயித்;து விற்பனை செய்யும் திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவது. மீனவர்களின் வளர்சிக்கு சிறப்பு திட்டங்கள் வகுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவது.
ஆறாவதாக,தாய்மொழிக் கல்வியின் மூலமும், பிறமொழி பயிற்சியின் மூலமும் தமிழக மாணவர்களின் அறிவத் திறனையும்,ஆற்றலையும் வளர்த்து அவர்களை ஆக்கப் பூர்வமான பணிகளில் பங்கேற்க செய்வது. தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியை ஆட்சி மொழி யாக்குவது. ஏழாவதாக,பெண்களை, இளைஞர்களை சுய தொழில், சுயசார்பு பொருளாதார மேம்பாட்டாளர்களாக உருவாக்குவது.
உள்நாட்டுஉற்பத்தியைபெருக்கிதொழில் வளர்ச்சியையும். தொழிலாளர்கள் வளர்ச்சியையும் உறுதி செய்வது. எட்டாவதாக. ஊழல்,லஞ்சம் இல்லாத நிர்வாகம் அமைய திட்டங்களை வகுத்து அதை நடை முறைப்படுத்தவது.
ஓன்பதாவதாக, புதிய மதுவிலக்கு கொள்கையை வகுத்து அதைநடை முறைப்படுத்தி பூரண மதுவிலக்கை கொண்டு வருவதோடு, மதுப்பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மகிழ்ச்சி பானங்களை அறிமுகப்படுத்தி மது நோயாளிகளின் ஆரோக்கியத்தை பேணுவது
ஆகிய நவரெத்தினா திட்டமாக அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பாக முதற் கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த மக்கள் நலத் திட்டத்திற்கு மக்கள் மேலான ஆதரவை வழங்க வேண்டுமென அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை சார்பாக கேட்டுக் கொள்வதாக அந்தப் பேரவையின் நிறுவனர் முனைவர் வைர..ந.தினகரன் தெரிவித்துள்ளார்.