Close
நவம்பர் 22, 2024 12:23 மணி

குறைகேட்பு முகாமில் ஆட்சியரிடம் 412 பேர் மனு அளிப்பு

புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று (28.08.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட  ஆட்சியர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப் பட்ட அலுவலர்களுக்கு  உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு எலக்ட்ரானிக்  முறையில் பிரெய்லி எழுத்துகளில் படிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிரெய்லி ரீடர் கருவியினை 4 நபர்களுக்கு தலா ரூ.35,000 வீதம், ரூபாய் 1.40 லட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  வழங்கினார்.

இக்கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு)ஆர்.ரம்யாதேவி,  தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யதுமுகம்மது,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  ஜி.அமீர்பாஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top