Close
நவம்பர் 22, 2024 4:40 மணி

ஆஞ்சநேய மூர்த்தி சுவாமி ஆலயத்தில்  லெட்சுமி ஹயக்ரீவர் ஜயந்தி விழா 

புதுக்கோட்டை

புதுக்கோட்டைஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி சுவாமி ஆலயத்தில் திருச்சபையினர் சார்பில் நடைபெற்ற ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தி விழா

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி சுவாமி ஆலயத்தில்  திருச்சபையினர் சார்பில் ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜயந்தி  விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை  தெற்கு நான்காம் வீதி பெரிய அனுமார் கோவில் மார்க்கெட் தெருவில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி சுவாமிஅனுமன் திருச்சபையினர் சார்பில் ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜயந்தி  விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த  ஆஞ்சநேயர் திருக்கோயிலில்  ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தி வழிபாடு மற்றும்  மலர்பூஜை செய்து  தீபாராதனை  நடைபெற்றது ஆலயத்தில் 11 ஆண்டாக ஆலயத்தில் லட்சுமி ஹயக்ரீவர் கல்விசங்கல்பபூஜை   நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

லட்சுமி ஹயக்ரீவர் பூஜையில்  கலந்து கொண்டவர்கள் அதி மேன்மையான கௌரவ  பதவி ஸ்தானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு அவர்களுக்காக வேலை வாய்ப்பிற்கான விசேஷ பூர்வமானது ஹய்கிரிவர்  ஆசிர்வாதத்தோடு   கற்பக விநாயகர் பூஜை  தொடங்கி புண்ணியாகராஜனம் கலச ஆவாகனம் பூர்ணாஹதி மஹா தீபாராதனை நடைபெற்றது.

புதுக்கோட்டை
ஹயக்ரீவர் பூஜை

இதில்  புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர்   பிரியா கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம்  குறித்த  அறிவுரை வழங்கினார். நிகழ்வில் அனைத்து பேருக்கும் கௌரவமான  பதவி  கிடைக்க வேண்டும்  என்ற  வேண்டுதலுடன் ஆலயத்தில்   லட்சுமி ஹயக்ரீவர் ஆசீர்வாதத்துடன் எழுதுபொருள் வழங்கப்பட்டது.

ஆலய சிவாச்சாரியார்  மணி குருக்கள் மற்றும்  திருக்கோகர்ணம் சீனிவாச குருக்கள்  தலைமையிலும் பூஜை  நடைபெற்றது .

ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் பற்றி   கே.மணி குருக்கள்  கூறிய தாவது:  ஞானமுள்ள ஆனந்தமயமான தேவர், தூய்மை யானவர்,  சகல கல்வி கலைகளுக்கு ஆதாரமானவர். இவற்றை எல்லாம் கொண்ட ஸ்ரீஹயக்ரீவரை உபாசிக்கிறேன்’ என்பது பொருள்.

கேட்டவற்றை உடனே அளிக்கக்கூடியவர் ஸ்ரீ ஹயக்ரீவர். ஸ்ரீஹயக்ரீவரை விரதமிருந்து மனத்தில் தியானித்து, ஹயக்ரீவ பஞ்ஜர ஸ்தோத்திரத்தைக் கூறுபவர்களுக்கு எல்லாக் கஷ்டங்களும் நீங்கி விரும்பியது யாவும் கிடைக்கும்.

புதுக்கோட்டை

குழந்தைகளைப் படிப்பில் மேன்மை அடையச் செய்யும்.. ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும்.அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம்.

அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார் ஹயக்ரீவர் கல்விக்கு அதிபதியான தெய்வத்தின் ஆசிர்வாதம் அனைத்து பேருக்கும் நிறைந்து இருக்க வேண்டும் என்ற நோக்கோடு இந்த ஆவணி திருபுவனம் என்று சொல்லக்கூடிய ஆவணி மகா திருபுவனம் ஓனம் பண்டிகை என்று சொல் வார்கள் அந்த திருவோணத்தில் ஹயக்கிரீவர் அவதாரம் எடுத்த நாள் மகா விஷ்ணுவின் 18 -ஆவது அவதாரம் என்று கருதப்படுகிறது.

 அனைவருக்கும்  அனைத்து செல்வங்களும் நிறைந்து இருக்க வேண்டும் என்ற நோக்கோடு  அனுமன் திருச்சபை சார்பாக இந்த விசேஷ பூஜை ஆனது  ஆலயத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் அவர்.

பக்தர்கள்  அனைவருக்கும்   பிரசாதம்   வழங்கப்பட்டது. நிகழ்வில், கல்வியாளர்கள், கவிஞர் நிலவை பழனியப்பன் மற்றும் ஆசிரியர்கள்,   கல்லூரி   மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்கள்  கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிக நெறியாளர்ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள்  செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top