Close
நவம்பர் 22, 2024 7:28 காலை

திருவொற்றியூரில் கோவில் மாடு இறப்பு… நூற்றுக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி

சென்னை

திருவொற்றியூரில் வாழ்ந்த கோவில் காளை

திருவொற்றியூரில் கோவில் மாடு இறப்பு நூற்றுக்கணக்கான பக்தர்கள் நாலு மாட வீதியில் ஊர்வலமாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் 4 மாட வீதிகளில் காளை மாடு ஒன்று கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சுற்றி வரும்  காளை மாட்டை பக்தர்கள் நந்தீஸ்வரன் என பயபக்தியுடன் கும்பிடுவது வழக்கம்.

பக்தர்கள் கீரை கட்டுகள் மற்றும் புல்கட்டுகளை வாங்கி உணவாக கொடுப்பார்கள். இந்தக்காளை மிகப்பெரிய உருவம் கொண்டிருந்தாலும் பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்ததில்லை. வாகன ஒலிப்பான்  அடித்தால் மட்டும் அது சாலையில் குறுக்கே செல்லாது.மெதுவாகத்தான் செல்லும்.

சென்னை மாநகரில் சிறுமி மீது மாடு மோதிய சம்பவத்தில் சாலை ஓரம் திரியும் மாடுகள் மீது மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது இந்த கோவில் மாடு மாநகராட்சி நடவடிக்கைக்கு உட்பட்டது கடந்த திங்கட்கிழமை இந்த மாடு பிடிக்கப்பட்டு பெரம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த மாட்டிற்கு உரிமையாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் அது அங்கேயே கட்டி வைக்கப்பட்டது. இது குறித்து  தகவல் அறிந்த பக்தர்கள் சிலர் அபராதம் கட்டி நேற்று மாலை 3 மணி அளவில் மாட்டை திருவொற்றியூர் சந்நிதி தெருவில் இறக்கி விட்டுள்ளனர்.

சென்னை
உயிரிழந்த திருவொற்றியூர் வடிவுடையம்ம்மன் கோவில் காளை

மாடு மிகவும் சோர்வாக நோய்வாய் பட்டது போல் இருந்துள்ளது இரவு 8 மணி அளவில் திடீரென குளக்கரை அருகில் படுத்து உயிரை விட்டது.  இது குறித்து தகவல் அறிந்த ந்த சிவ பக்தர்களும் வடிவுடையம்மன் கோவில் பக்தர்களும் ஏராளமாக ஒன்று கூடினர் அவர்கள் இந்த மாட்டை இந்து சம்பிரதாயபடி இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

இது குறித்து மண்டல குழு தலைவர் திமு தனியரசுவிடம் கூறினர்.  அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி ஜேசிபி இயந்திரம்,  மாட்டு வண்டி ஏற்பாடு செய்து கொடுத்தார்.  நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்த மாட்டுக்கு குங்குமம் சந்தனம் தெளித்து ஆன்மீக முறைப்படி மலர்மாலைகள் அணிவித்து அதை ஊர்வலமாக நாலு மாட வீதிகளிலும் மேளதாளங்கள் தாரை தப்பட்டைகள் முழங்க மாடு இறுதி ஊர்வலம் நடத்தினர்.

பலர் பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். நள்ளிரவு 2 மணி அளவில் மாட்டை புதைப்பதற்காக மணலி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குழி தோண்டி அடக்கம் செய்தனர். அப்போதும் ஆன்மீக முறைப்படி பல சடங்குகள் செய்தனர்.

சென்னை
இறந்த கோவில் காளையை அடக்கம் செய்த பக்தர்கள்

இதுகுறித்து கண்ணப்பன் என்பவர் நிருபர்களிடம் கூறும் போது,  இந்த மாட்டை  யார் விட்டது என தெரியாது. ஆனால் எல்லோரும் அந்த மாட்டை நந்தீஸ்வரர் என கூப்பிடுவார்கள். ஆனால் யாருக்கும் அது எந்த துன்பமும் விளைவித்ததில்லை. பார்க்க  அச்சம் தரக்கூடிய  உருவமாக இருக்கும்.

மாநகராட்சி பிடித்துக் கொண்டு போன போது  சரியாக சாப்பிடவில்லை என தெரிகிறது. நோய் வாய்ப்பட்டதால்  இறந்திருக்கலாம் என நினைக்கிறோம். மாடு இறந்தது குறித்த விவரம் பல்வேறு பக்தர்களுக்கு தெரியாது. அவற்றை நாங்கள் புகைப்படம் எடுத்து வைத்துள்ளோம் பக்தர்கள் மிகவும் வேதனை  அடைந்துள்ளனர் என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top