Close
நவம்பர் 22, 2024 5:31 மணி

காலை உணவு திட்டத்தை தனியார் சுய உதவி குழுக்களிடம் ஒப்படைத்ததைக் கண்டித்து சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்

காலை உணவு திட்டத்தை தனியார் சுய உதவி குழுக்களிடம் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்தையும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களையும் முழு நேர அரசு ஊழியர்களாக அறிவித்திட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை  கைவிட்டுவிட்டு சத்துணவு மையங்களில் உள்ள சத்துணவு ஊழியர்களிடம் அந்த பணியினை வழங்க வேண்டும்,

தமிழக அரசின் நிரந்தர திட்டத்தில் பணியாற்றக்கூடிய சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழு நேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை
கோரிக்கைகளை வலியுறுத்தி மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்

இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: காலை உணவு திட்டத்தில் சமைக்கும் பணியினை சுய உதவி குழுவினரிடம் ஒப்படைத்தது தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சத்துணவு பணியாளர்கள் கடந்த  40 ஆண்டு காலமாக சத்துணவு மையங்களில் முறையாக சமைத்து  விநியோகம் செய்து வரும் நிலையில் அரசு தங்களை தவிர்த்து விட்டு தனியார் பணியாளர்களை நியமித்தது வேதனை அளிப்பதாக உள்ளது.

காலை உணவை சமைக்கும் பணியாளர்களுக்கு சமையல் எரிவாயுவை வழங்கிய அரசு 40 ஆண்டுகளாக சமையல் பணியில் ஈடுபடும் தங்களுக்கு ஏன் சமையல் எரிவாயு வழங்கவில்லை.  விறகு அடுப்பிலேயே சமைத்து வருவதால் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை வழங்க வேண்டும் என்றும் கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top