Close
செப்டம்பர் 20, 2024 5:33 காலை

நிலவில் லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என பெயர் சூட்டி இருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது

தஞ்சவூர்

தஞ்சையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறார், ஐப்சோவின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி .ஆர்.ரவீந்திரநாத்

நிலவில் லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என பெயர் சூட்டி இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளை இந்துத்துவ அரசியலாக்கும். ஒன்றிய பிரதமர் மோடிக்கு அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக கண்டனம் தெரிவித்துள்ளது.

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் சார்பில் யாசர் அராஃபத் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம்  தஞ்சை கிழக்கு ராஜவீதி ஏஐடியூசி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முனைவர் கோ.பாஸ்கர் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஆர்.சிவஞானம் வரவேற்புரையாற்றினார். ஆர்.கே.செல்வகுமார் , சி.பாஸ்கரன், சி. இராமலிங்கம் , மா. சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மணிப்பூர் அவலங்களும் படிப்பினைகளும் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில துணைச் செயலாளர்
மு.வீரபாண்டியன் , மூன்றாம் உலகப்போரும் உலக சமாதா னமும் என்ற தலைப்பில் ஐப்சோவின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி .ஆர்.ரவீந்திரநாத் ,

பெண்ணடிமையும் சமாதான சகவாழ்வு என்ற தலைப்பில். மாநில செயலாளர் டாக்டர் ஏ. ஆர். சாந்தி, இன்றைய நமது கடமைகள் என்ற தலைப்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி ஆகியோர் கருத்துரை ஆற்றினர் . முடிவில் முனைவர் எம். சுந்தரமூர்த்தி  நன்றி கூறினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நேட்டோ ராணுவக் கூட்டணியை  உடனடியாக கலைக்க வேண்டும்.இந்திய- சீன தலைவர்கள் பிரிக்ஸ் மாநாட்டில் பேச்சு வார்த்தை நடத்தியதை  வரவேற்பது.

இஸ்ரோ  விஞ்ஞானிகள் தொழில்நுட்ப நிபுணர்களின், அறிவியல் தொழில்நுட்ப திறமைக்கு,  சாதனைக்கு , சந்திராயன் 3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதும் , அதனுடைய லேண்டர் நிலாவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியதும் உதாரணமாகத்திகழ்கிறது .

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் தொழிலாளர்களுக்கும், ஐப்சோ பாராட்டுகளை , வாழ்த்து களை தெரிவித்து கொள்கிறது . இந்திய விஞ்ஞானி களின், இந்த மகத்தான சாதனையை,  இந்துத்துவ அரசியலுக்கு பிரதமர் மோடி பயன்படுத்துவது வன்மையாக  கண்டிக்கத்தக்கது .

நிலாவில் லேண்டர்  இறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயர் சூட்டுவது நமது நாட்டின் மதச்சார்பற்ற கோட்பாட் டிற்கு எதிரானதாகும். இஸ்ரோ விஞ்ஞானிகளில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என பலதரப்பினரும் உள்ளனர் .
மதச்சார்பற்றவர்கள் உள்ளனர்.

இந்திய நாட்டு மக்களும் பன்முகத் தன்மை வாய்ந்தவர்கள். பல்வேறு மதங்கள், இனங்கள் ,மொழிகள் சாதிகள் உள்ள நாடு இந்தியா.அவ்வாறு இருக்கும் பொழுது லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பிரதமர் பெயர் சூட்டி இருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

மோடி,  அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளையும் ,இவ்வாறு இந்துத்துவ அரசியலுக்கு பயன்படுத்துவது , இந்திய நாட்டு மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும். இது நாட்டின் ஒற்றுமை ஒருமைப் பாட்டிற்கு எதிரானது .

இத்தகைய முயற்சிகளை பிரதமர் மோடி கைவிட வேண்டும் .
மணிப்பூர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண ஒன்றிய அரசு முயல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள்  நிறைவேற்றப்பட்டன. இக்கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top