Close
நவம்பர் 22, 2024 1:37 மணி

இறந்து போன 95 வயது மூதாட்டியின் கண்கள் தானம்

சென்னை

திருவொற்றியூரில் வயது மூப்பின் காரணமாக இறந்து போன அம்சவள்ளி என்ற 95 வயது மூதாட்டியின் கண்கள் தானமாக அளிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் அப்பர் சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் அம்சவள்ளி (95). இவருக்கு ரவி(76), அன்பழகன் (72) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.  அம்சவள்ளி தனது மகன்கள் பேரன், பேத்தி, கொள்ளுபேரன், கொள்ளுப்பேத்திகளுன் மூன்று தலைமுறைக் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

தான் இறந்துவிட்டால் தனது கண்களை தானம் செய்துவிட வேண்டும் என அடிக்கடி கூறி வந்துள்ளார்.  இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக புதன்கிழமை அம்சவள்ளி திடீரன காலமானார்.

இதனையடுத்து அம்சவள்ளியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கண்களைத் தானம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதுகுறித்து சங்கரா நேத்ராலயா மருத்துமனைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த மருத்துவர்கள் அம்சவள்ளியின் கண்களின் நிலை குறித்து சோதனை நடத்தினர்.

இதில் கருவிழிகள் இரண்டும் நல்லநிலையில் இருந்ததால் அறுவைச் சிகிச்சை மூலம் இரண்டு கருவிழிகளையும் அகற்றி எடுத்துச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top