Close
நவம்பர் 22, 2024 5:52 மணி

அனிதா நினைவு நாள்… திருவொற்றியூரில் திமுக சார்பில் அஞ்சலி

சென்னை

நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவு நாளை ஒட்டி வெள்ளிக்கிழமை திருவொற்றியூரில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்

நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவு நாளை ஒட்டி வெள்ளிக்கிழமை திருவொற்றியூரில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்குப் பகுதி, மாணவர் அணி சார்பில் திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்ற நிகழ்வில்,  பகுதி செயலாளர் மற்றும் மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு கலந்து கொண்டு அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து காலை உணவு திட்டம் பற்றி இழிவான சொற்களை பயன்படுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகைகளை தீ வைத்து கொளுத்தினர். பின்னர் தினமலர் பத்திரிகை நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி பக்தன், பகுதி அவைத்தலைவர்  ஆர்.சி.ஆசைத்தம்பி, பகுதி துணைச் செயலாளர் ஆர்.ஏஸ்.சம்பத், எம்.வீ.குமார், பொருளாளர் இரா.குமரேசன், வட்ட கழக செயலாளர் டி.சி.வி. மணிகண் டன்,  மாவட்ட பிரதிநிதி டி.டி.ஏம்.பாபு  மற்றும் முக்கிய நிர்வாகிகள்  கலந்து கொண்டு அனிதாவின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர்,  நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசைக் கண்டித்து  அனைவரும் முழக்கமிட்டனர்.
இதேபோல் திருவொற்றியூர் மேற்கு பகுதி சார்பில் திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் வை. ம. அருள்தாசன் தலைமையில் திமுகவினர் திரளாகக் கலந்து கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த அனிதாவின் உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.
2017 -ஆம் ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், தனது கனவான மருத்துவக் கல்வி படிப்பது சாத்தியமாகவில்லை என்ற வேதனையில்  செப்டம்பர் 1 -ஆம் தேதி மாணவி அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top