காந்தியத் திருவிழா 2023 -ஐ முன்னிட்டு புதுகையில் காந்திப் பேரவை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, ஓவியம், குழுநடனம், குழு நாடகப் போட்டிகளுக்கான இறுதிப் போட்டி சனிக்கிழமை (02.09.2023)நடை பெறுகிறது.
புதுகையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் காந்தி ஜயந்திவிழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, பாட்டு, கட்டுரை, கவிதை, ஓவியம், குழுநடனம், குழு நாடகப் போட்டிகளுக்கான இறுதிப் போட்டி (02.09.2023) நாளை நடைபெறுகிறது.
இதில் பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.ஆண்டு தோறும் காந்தி ஜயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்திசமூக நலப் பேரவை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கட்டுரை, கவிதை, ஓவியம், குழுநடனம், குழு நாடகப் போட்டிகளை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்திப் பேரவை சார்பில் நடைபெறும் காந்தியத்திருவிழா 2023 ஐ முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக் கான பல்வேறு போட்டிகளின் இறுதி போட்டிபுதுக்கோட்டையில் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாளை (02.09.2023) காலை
9.30 மணிக்கு நடைபெறுகிறது.
மாறுவேடப்போட்டி : காந்தி வேடம் மட்டும் இந்த போட்டி மட்டும் 02-10-23 அன்று காலை 9 மணிக்கு காந்திபூங்காவில் நடைபெறும் இதில் யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் பங்கேற்றவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் களும் 02-10-2023 அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறும் காந்தியத் திருவிழாவில் மாலை 3.00 மணிக்கு வழங்கப்படும் என்று பேரவையின் நிறுவனர் வைர.ந. தினகரன் தகவல் தெரிவித்தார்.