Close
நவம்பர் 22, 2024 10:48 காலை

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அர்ஜுன்சம்பத் வலியுறுத்தல்

தமிழ்நாடு

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத்

ஓரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திரும்பப் பெறாமல் அமல்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்  வலியுறுத்தினார்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்துக் கோவில்களை கட்டிக் காக்கக் கூடிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. அவர்கள் இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் செப். 7 -ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் புகார் அளிக்கும் போராட்டம் நடத்தப்படும்.மத்திய அரசு கொண்டு வரும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பல்வேறு முறைகேடுகளைத் தடுக்கும். தேர்தல் செலவுகள் மிச்சமாகும். சிலர் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பைப் புறம்தள்ளிவிட்டு, திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பின்வாங்கக் கூடாது.

ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டபோதும் இதேபோன்ற எதிர்ப்பைக் கூறினார்கள். அவர்கள்தான் இப்போது ஒரே நாடு ஒரே திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.மலையாள இந்து பண்டிகையான ஓணத்துக்கு முதல்வர் வாழ்த்து சொல்வார். ஆனால் தமிழக இந்து பண்டிகைகளுக்கு அவர் வாழ்த்து சொல்ல மாட்டார். திமுக தலைவராக அவர் இவ்வாறு செயல்படலாம். ஆனால் மாநிலத்தின் முதல்வராக அவர் இவ்வாறு செயல்படக் கூடாது என்றார் அர்ஜுன் சம்பத்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top