Close
நவம்பர் 25, 2024 3:46 காலை

ஈரோடு வடக்கு மாவட்ட திமுகவில் மோதல் போக்கு… கட்சித்தலைவர் ஸ்டாலினிடம் முறையிட முடிவு

ஈரோடு

ஈரோடு வடக்கு மாவட்டம் திமுக கட்சிக்குள் உள்ள உட்கட்சி பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அமைச்சர் முத்துசாமி தலைமையில் கவுந்தப்பாடியில் கூட்டம் நடந்தது

உள்கட்சி பிரச்னை தொடர்பாக அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகி களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று (செப் 2)  நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எவ்வித சமரச முடிவும் எட்டப்படாததால்  அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்வதென முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுகவில் பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன. வடக்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கட்சி நிர்வாகிகளி டையே கடும் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.

இதற்கிடையில் திமுக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர் கலையரசி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.

இது தொடர்பான செய்தி தமிழ்மணி டாட்  நியூஸ் – இணையளத்தில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக இப்பிரச்னை கட்சியின் மேலிட கவனத்திற்கு சென்றது. உள்கட்சி பிரச்னை தொடர்பாக அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகி களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று (செப் 2)  நடந்தது.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் ஒலகடம் அம்மாபேட்டை நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியை சேர்ந்த திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

பேச்சு வார்த்தை நிர்வாகிகளை சமரசம்  செய்து  திருப்திபடுத்தியதாக தெரியவில்லை. இதனால் கட்சி நிர்வாகிகள்  அதிருப்தியும் கோபத்திற்கும் ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், ஈரோடு வடக்கு மாவட்டம் திமுக கட்சிக்குள் உள்ள உட்கட்சி பிரச்னைகளை தீர்ப்பதற்காக அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கவுந்தப்பாடியில் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் நல்லசிவத்தை காப்பாற்றும் வகையிலும் பிரச்னைக்குரிய ஒன்றிய செயலாளர்களை காப்பாற்றும் வகையிலும் பேசி, எவ்வித சமரச முடிவும் எடுக்காமல்  கூட்டத்தை முடித்து விட்டனர். இந்தக்கூட்டத்தில் அளிக்கப்பட்ட பதில் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.  அதனால் இப்பிரச்னையை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும்  தெரிவித்தனர்.

# செய்தி: சி. ராஜி- கோபி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top