இந்து சமய நிலையத்துறைக்குள்பட்ட புதுக்கோட்டை நகர் கிழக்கு நான்காம் வீதி வடபுறம் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. .
கும்பாபிஷேத்தை முன்னிட்டு கோயில் அருகில் அமைக்கப்பட்ட யாகசாலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டுக் குருக்கள் மற்றும் சுவாமிநாதகுருக்கள் [என்ற} ரவி குருக்கள் தலைமையில் விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லட்சுமிபூஜை ,கோ பூஜை சிறப்பாக நடைபெற்றது
கோயில் யாகசாலையில் வைத்திருந்த புனித நீர் குடங்க ளுக்கு, முதற்கால யாக பூஜை மேலும் இரண்டாம் கால யாக பூஜை மூன்றாம் கால யாகபூஜை, நான்காம் கால யாக பூஜையும் தொடர்ந்து ஐந்தாம் கால யாகபூஜை, ஆறாம் கால யாகபூஜை பூர்ணாஹூ தி மஹா தீபாரதனை நடைபெற்றது.
யாகசாலையில் இருந்து கடங்கள் கோயில் கோபுரத்திற்கு சிவாச்சாரியர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கோபுர கலசத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அதிஷ்டான சுவாமிகள் ஸ்ரீ பிரணவானந்த முன்னிலையில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டும் கோவிலில் ஸ்ரீ முத்துமாரியம்பாளுக்கு கலாசாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டமான், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஆனந்த், இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் தி. அனிதா.
மற்றும் திமுக நகர செயலாளர் செந்தில், நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், நகராட்சி துணைத் தலைவர்லியாகத்அலி, ஜெ ஜெ கல்லூரி செயலர் என். சுப்பிரமணியன், கம்பன் கழக செயலாளர் ரா. சம்பத்குமார்.
மற்றும் விழாக்குழுவினர் வழக்கறிஞர் ராமநாதன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சுப சரவணன், கல்வியாளர் கருப்பையா, தொழிலதிபர்கள் குபேர சம்பத், விஜய் முருகேசன், புவனேஸ்வரி தங்க மாளிகை நடராஜன் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பட்டிமன்ற பேச்சாளர் ச. பாரதி நிகழ்வை வர்ணனை செய்தார் மாலையில் முத்துமாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பவனி வந்தது கும்பாபிஷேகத்தை திரளான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
இரவு இயக்குனர் நடிகர் பாக்யராஜ் தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெறுகிறது கும்பாபிஷேக திருப்பணி குழுவினர், விழாக்குழுவினர் கும்பாபிஷேக பணியை செய்திருந்தினர்.
காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்புடன் செய்தனர்.