Close
மே 22, 2025 7:33 மணி

வேளாண்துறை சார்பில் மானிய விலையில் கருவிகள் வழங்கல்

புதுக்கோட்டை

வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் எரிச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் எரிச்சி கிராமத்தில் 250 மெ.டன். சேமிப்பு கிடங்கினை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர்  திறந்து வைத்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கும் திட்டத்தையும்  தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எரிச்சியில் 250 மெ.டன். சேமிப்பு கிடங்கினை காணொலிக் காட்சி வாயிலாக  (04.09.2023) திறந்து வைத்தார்.

பின்னர், 192 எண்ணிக்கையிலான ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்களை வழங்கி, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட 6,746 விவசாயிகளுக்கு ரூ.6.63 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

எரிச்சியில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 250 மெ.டன். சேமிப்பு கிடங்கு திறப்பு விழாவில்,  சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பவர் டில்லர் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  பங்கேற்று, விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்களை வழங்கினார்.

புதுக்கோட்டை
விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கிய ஆட்சியர் மெர்சி ரம்யா

வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்து களைக் கேட்டறிந்து வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது.

உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண் துறை என்ற பெயரினை வேளாண்மை – உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்து, வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்

முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், விவசாயிகளுக்கு 1,50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கியது.

விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை இயந்திர மயமாக்குதல் திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம், பயிர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில்  வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி களிலும் 192 எண்ணிக்கையிலான பவர் டில்லர் ரூ.1.63 கோடி மதிப்பீட்டிலான மானிய விலையில் வழங்கப்பட்டது.

மேலும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், அறந்தாங்கி வட்டம், எரிச்சி சிதம்பர விடுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 250 மெ.டன். சேமிப்பு கிடங்கு காணொலிக்காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

மேலும் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிதமான வேளாண் வறட்சி நிவாரணம் வழங்கும் பணியினை  தமிழ்நாடு முதலமைச்சர்  தொடங்கி வைத்தார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,746 விவசாயிகளுக்கு ரூ.6.63 கோடி மதிப்பி லான நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கு களில் வரவு வைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி,

அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ப.ஜஸ்டின் ஜெபராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மு.க.ராமகிருஷ்ணன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் புதுக்கோட்டை விற்பனைக் குழு செயலாளர் மல்லிகா,

செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை) செல்வம், உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை) முத்துகுமார், உதவிப் பொறியாளர்கள் கௌசல்யா, ராதாகிருஷ்ணன், குணசீலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top