Close
நவம்பர் 22, 2024 11:21 காலை

கவிராஜன் அறநிலையம் சார்பில் ஆசிரியர் தின விழா

புதுக்கோட்டை

கவிராஜன் அறநிலையம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் விருது பெற்ற ஆசிரியர்கள்

கவிராசன் அறநிலையம் சார்பில், ஆசிரியர் தின விழா, புதுக்கோட்டை ஶ்ரீ பாரதி மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, ஶ்ரீ பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர், குரு. தனசேகரன் தலைமை வகித்தார்.

இந்த விழாவில், புதுக்கோட்டை கலைமகள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர் இரா. கௌசல்யா, புதுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் த.சகாயராஜ், குழிபிறை மு.சி.த. இராம. மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் வீர. ராமசாமி, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் சு. குகன், வடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் மா. ரெஜி, ஆகிய ஐவருக்கும், நட்சத்திர ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன.

“மாணவர்கள் வாழ்வில் உயர்வது கூட ஆசிரியர்களுக்கு செய்யும் நன்றிதான்”  – எம்எம். அப்துல்லா எம்பி

புதுக்கோட்டை

விருதுகளை வழங்கி  மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா  பேசியதாவது: என்னுடைய உயர்வுக்கு காரணம் என் ஆசிரியர்கள்தான். அதிலும், என்னை வகுப்பின் தலைவனாக்கிய பாலையா பள்ளி ஆசிரியை விஜயலெட்சுமி , இன்று நான், நாடாளுமன்ற உறுப்பினராக உயர, முக்கியமான காரணம்.

அவர்தான், என்னை முதலில் மேடை ஏற்றிப் பேச வைத்தார். மாணவர்கள் வாழ்வில் உயர்வது கூட, ஆசிரியர்களுக்கு செய்யும் நன்றிதான். மாணவிகளாகிய நீங்களும் வாழ்வில் உயர்ந்து காட்டுங்கள். அப்போதும், ஒரே மாதிரி இருப்பதை விட, ஒற்றுமையாக இருங்கள். நாட்டுக்கும் அதுவே தேவை என்றார் அவர்.

தேசிய நல்லாசிரியர் விருதாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி, தனியார் தொலைக்காட்சியின் பேச்சு நிகழ்வின் வெற்றியாளர் கவிஞர்  மு. இராகவேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஶ்ரீ பாரதி கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, லியோ ஃபெலிக்ஸ் லூயிஸ், கனகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் தொடக்கத்தில், கவிராசன் அறநிலைய இணை நிர்வாக அறங்காவலர் கவி. முருகபாரதி வரவேற்றார். நிறைவில், ஶ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் செ. கவிதா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top