Close
நவம்பர் 26, 2024 5:23 காலை

தேர்வு அறையில் தூங்கிய மாணவனை எழுப்பிய ஆசிரியர் மீது தாக்குதல்

சென்னை

ஆசிரியரை தாக்கிய மாணவன்

தேர்வு அறையில் தூங்கிய மாணவனை எழுப்பிய ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

திருவொற்றியூர் விம்கோ ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று மாலை பன்னிரண்டாம் வகுப்பு வணிகவியல் தேர்வு நடைபெற்றது.

அப்போது  நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத பாரதி நகரைச் சேர்ந்த மாணவன் தேர்வுக்கு வந்திருந்தான். அவனது தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க தேர்வு எழுத அறையில் அனுமதிக்கப்பட்டான்.

ஆனால் அந்த மாணவன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப் என்ற போதை தரும் பாக்கை சாப்பிட்டுவிட்டு வகுப்பறையிலேயே தூங்க ஆரம்பித்தான். இதனால் தேர்வு கண்காணிப்பு பணியில் இருந்த ஆசிரியர் சேகர்(46) என்பவர் மாணவனை எழுப்பி தேர்வு எழுதுமாறு கூறியுள்ளார்.

தன்னை ஆசிரியர் எழுப்பிய காரணத்தால் ஆத்திரமடைந்த 17 வயது மாணவன் ஆசிரியர் சேகரின் முகத்தில் சர மாரியாக குத்து விட்டானாம்.  இதில் அவருக்கு மூக்கு மற்றும் இடது கண் பக்கத்தில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.

மற்ற மாணவர்களும் மாணவிகளும் உரக்க குரல் எழுப்பி உதவிக்கு மற்ற ஆசிரியர்களை அழைத்தனர், காயமடைந்த  ஆசிரியர் சேகர் ‌ அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது .

ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் வேளையில் தாங்கள் அடிபட்டாலும் பரவாயில்லை பள்ளியின் பெயரும் மாணவர் களின் நன்மதிப்பும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மென்மையான போக்கை ஆசிரியர்கள் கடைபிடித்து   வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top