Close
மே 23, 2025 5:01 மணி

குறுவை, சம்பா பயிர்களின் நிலைமை.. அரசுச்செயலர் கள ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே வெட்டிக்காடு கிராமத்தில் நெல் வயலை பார்வையிட்ட அரசுச்செயலர் சமயமூர்த்தி

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களில் ஆற்று நீரின் மூலம் சாகுபடி செய்யப்பட்ட குறுவை, சம்பா மற்றும் மாற்றுப் பயிர்களின் நிலை குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுசெயலாளர்  சி.சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  முன்னிலையில்  நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் ஒன்றியத்தில் ராமநாதபுரம் கூடுதல் கிராமம் மற்றும் ராமநாதபுரம் 8 -ஆம் நம்பர் கரம்பை ஆகிய கிராமங்களில் விவசாயிகளின் நிலங்களில் நெற் பயிர்களை அரசுசெயலாளர் , மாவட்ட ஆட்சியருடன் பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் மருங்குளம் அரசு தோட்டக்கலைத் துறை பண்ணை யில் ஆய்வு செய்தஅரசு செயலாளர்  தோட்டக் கலை செடிகளின் இருப்பு மற்றும் அவற்றை பராமரிக்கும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.

மேலும் வெட்டிக்காடு கிராமத்தில்  நெற்பயிர்களை அரசு செயலாளர், மாவட்டஆட்சியருடன் பார்வையிட்டார் பின்னர் ஒரத்தநாடு வட்டம், பருத்திக்கோட்டை, தென்னமநாடு வடக்கு கிராமத்தில் குறுவை, சம்பாபயிர்களின் நிலைகுறித்துநேரில் பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து ஆய்வு  செய்தார்.

இந்தஆய்வின் போதுவேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கோமதிதங்கம், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, துணை இயக்குனர்கள் சுஜாதா, பாலசரஸ்வதி, தோட்டக்கலைத் துறைதுணை இயக்குனர் (பொ)  வெங்கட்ராமன், உதவி இயக்குனர்கள் அய்யம்பெருமாள், திரு.கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top